Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒட்டுமொத்த வீரர்களும் காலை வாரினர்.. தனி ஆளாக போராடிய சூர்யகுமார்.. வெல்லுமா இந்திய அணி

ஃபுளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 166 ரன்கள் வெற்று இலக்காக நிர்ணயித்துள்ளது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் தொடரை வெல்ல உத்வேகத்துடன் கடைசி போட்டியில் பலப்பரிட்சை நடத்தினர்.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் ஜெயஸ்வால் ஐந்து ரன்களிலும் கில் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

Suryakumar yadav single handedly saved indian team from humiliation

இதனால் இந்திய அணி 17 ரன்களை சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு திலக் வர்மா மற்றும் சூரிய குமாரியாதவ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். குறிப்பாக திலக் வருமா அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி இரண்டு சிக்சர் என 18 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இன்றைய ஆட்டத்திலும் அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.

பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரிகள் அடித்து 13 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சர் அடித்து 14 ரன்களிலும் அக்சர் பட்டேல் ஒரு சிக்சர் அடித்து 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இவர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்காமல் வெளியேறியது இந்திய அணிக்கு நெருக்கடியை அதிகரித்தது.எனினும் சூரியகுமார் யாதவும் தனி ஆளாக நின்று பேட்டிங் செய்தார்.

நான்கு பவுண்டரி மூன்று சிக்சர் என பட்டையை கிளப்பிய சூரியகுமார் யாதவ் 45 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். எனினும் அவரும் ஆட்டம் இழந்தவுடன் இந்திய அணியில் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. ஆர்ஸ்தீப் 8 ரன்களிலும் குல்திப் யாதவ் மற்றும் சாகல் கோல்டன் டக் ஆகியும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் தற்போது பேட்டிங் செய்து வருகிறார்கள். அந்த அணி பவர் பிளே முடிவதற்குள்ளே 50 ரன்கள் தாண்டி அபாரமாக விளையாடி வருகிறது. இதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 13, 2023, 23:07 [IST]
Other articles published on Aug 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+