Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

47 பந்துகளில் 120 ரன்கள்... அர்ஜூன் டெண்டுல்கர் விக்கெட்... நெவர் எவர் கிவ்-அப் சூர்யகுமார்!

டெல்லி :சையத் முஸ்தாக் அலி கோப்பை 2021 தொடர் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கி 31 வரையில் நடைபெறவுள்ளது.

முன்னதாக தற்போது இந்த தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் டீம் பி மற்றும் டீம் டி இடையிலான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரை ஒரே ஓவரில் 21 ரன்களுக்கு சூர்யகுமார் யாதவ் வீழ்த்தினார்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர்

சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கி 31ம் தேதி வரையில் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இந்த தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி போட்டியில் சிறப்பு

பயிற்சி போட்டியில் சிறப்பு

இந்நிலையில் இந்த தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சூர்யகுமார் தலைமையிலான டீம் பி மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான டீம் டி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ரன்களை குவித்தார்.

ஐபிஎல்லில் சிறப்பான செயல்பாடு

ஐபிஎல்லில் சிறப்பான செயல்பாடு

கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், கடந்த ஐபிஎல் போட்டிகளின் இடையில் தன்னை ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வு செய்யாத நிலையிலும் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி தன்னுடைய மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமா அமைந்தார்.

120 ரன்கள் குவிப்பு

120 ரன்கள் குவிப்பு

இந்நிலையில் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடருக்கான தற்போதைய பயிற்சி போட்டியில் அணி சார்பில் 3வது வீரராக களமிறங்கிய அவர், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 120 ரன்களை குவித்துள்ளார். இதன் ஸ்டிரைக் ரேட் 255.32. 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸ்கள் என சூர்யாவின் பேட்டிங்கால் மைதானமே அதகளப்பட்டது.

21 ரன்களில் அர்ஜூன் அவுட்

21 ரன்களில் அர்ஜூன் அவுட்

மேலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரையும் ஒரே ஓவரில் 21 ரன்களில் சூர்யகுமார் அவுட்டாக்கியுள்ளார். இதேபோல அர்ஜூன் டெண்டுல்கர், தனது 4 ஓவர்களில் 33 ரன்களை கொடுத்து எதிரணியின் சித்தார்த் அக்ரியை அவுட்டாக்கினார்.

Story first published: Tuesday, December 22, 2020, 18:13 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+