Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி20 அணியில் விரைவில் கம்பேக்.. சூர்யகுமார் யாதவ் சொன்ன தகவல்

மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ், தான் தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாகவும், எதிர்காலத்தில் அனைத்தும் நல்லபடியாக அமையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு மூன்றாவது டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சில மாதங்களிலேயே, அவரது ஃபார்ம் மற்றும் அடுத்த உலகக் கோப்பைக்கான இரண்டு ஆண்டு கால திட்டத்தை கருத்தில் கொண்டு, 35 வயதான சூர்யகுமார் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பேட்டிங்கில் அவர் தொடர்ந்து சந்தித்த தடுமாற்றங்களும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது சுமாரான ஆட்டமும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாகக் கருதப்படுகிறது.

Suryakumar yadav

இந்த நிலையில், புரோ கோவிந்தா லீக்கின் தூதராக இருக்கும் சூர்யகுமார் யாதவிடம், இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்த அவரது திட்டம் பற்றி கேட்கப்பட்டபோது, "நான் எனது முழு உழைப்பையும் செலுத்தி வருகிறேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். விஷயங்கள் சாதகமாக அமைந்தால், அனைத்தும் தானாகவே சரியாகிவிடும்" என்று பதிலளித்தார்.

எங்களுக்கு வெற்றி கிடைக்கல.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் இன்று வென்றது.. இலங்கையை பாராட்டிய சுப்மன் கில்

எங்களுக்கு வெற்றி கிடைக்கல.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் இன்று வென்றது.. இலங்கையை பாராட்டிய சுப்மன் கில்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக விளங்கும் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக தனது கடைசி ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியகுமார் யாதவ், ஃபார்ம் காரணமாகவே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்த அவர் நடப்பாண்டில் 14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 484 ரன்கள் குவித்தார். இதில் நான்கு அரை சதம் அடங்கும். இதில் இவரது சராசரி 44 என்று அளவில் இருந்தது.

ரூ.4000 ஆயிரம் கோடி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா தோனி? வாய்ப்பே இல்ல என EX வீரர் கருத்து

Also Read

ரூ.4000 ஆயிரம் கோடி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா தோனி? வாய்ப்பே இல்ல என EX வீரர் கருத்து

ஸ்ட்ரைக் ரேட் 161 என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு 21 டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய அவர் மொத்தமாகவே 218 ரன்கள் தான் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி வெறும் 13 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட்123 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று ஐபிஎல் தொடரில் 2026 ஆம் ஆண்டு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் வெறும் இரண்டு அரை சதம் அடங்கும். அவருடைய சராசரி 20 என்று அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 147 என்ற அளவில் இருந்தது.

Story first published: Friday, August 28, 2026, 8:00 [IST]
Other articles published on Aug 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+