
சூர்யகுமார் அபாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பெரிய ரன்களை அடிக்காத சூரிய குமார் மூன்றாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ சி சி டி 20 தரவரிசை பட்டியலில், சூரியகுமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சூரியகுமார் யாதவ் தற்போது 816 புள்ளிகள் பெற்று இருக்கிறார்.

முதலிடம் கிடைக்குமா?
விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு பிறகு அதிக புள்ளிகளை பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையும் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சூரியகுமார் யாவும் 3 போட்டிகளில் 111 ரன்கள் அடித்துள்ளார். 168 என்ற வகையில் அவரது ஸ்ட்ரைக்ரேட் உள்ளது. சூரியகுமார் முதல் இடத்திற்கு வர நிறைய வாய்ப்புள்ளது.வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை ஆஸ்திரேலியாக்கு எதிரான டி20 தொடர் என தொடர்ந்து போட்டிகளில் சூரியகுமார் பெரிய ரன்களை அடித்தால் பாபர் அஸ்ஸாமின் முதல் இடத்தை பிடிக்க முடியும்.

மற்ற வீரர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் மூன்றாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா வீரர் ஏடன் மார்க்கம் நான்காவது இடத்திலும் , இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் ஐந்தாம் இடத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா வீரர் ரிசா ஹென்றிக்ஸ் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடி அவர் 16 இடங்கள் முன்னேறி தற்போது 15 வது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று அறிமுகத் தொடரில் விளையாடிய ஸ்டப்ஸ் 1404 இடங்கள் முன்னேறி தற்போது 126 வது இடத்தில் இருக்கிறார்.

விராட் கோலி சரிவு
பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் இஷான் கிஷன் 14 வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 16-வது இடத்திலும், இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் 17வது இடத்திலும், கேஎல் ராகுல் 20வது இடத்திலும் உள்ளனர். இதே போன்று கடந்த சில போட்டிகளாக தடுமாறி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு இடம் சரிந்து 25வது இடத்தை பிடித்துள்ளார் .இந்த தரவரிசை பட்டியலில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பது விராட் கோலி தான். விராட் கோலி கடந்த சில டி20 போட்டிகளாக விளையாடவில்லை. இதனால் அவர் 28 வது இடத்திற்கு சரிந்துள்ளார். விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றிலே அவர் பிடித்திருக்கும் குறைவான தரவரிசை இதுதான்.


Click it and Unblock the Notifications











