சூர்யகுமார் செய்த 4 மரண மாஸ் சம்பவங்கள்.. 2022ஆம் ஆண்டில் ஏற்றம் பெற்றது எப்படி? முழு விவரம்
மும்பை : 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவுக்கு சிறந்த ஆண்டாக விளங்கி இருக்கிறது.பல ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருந்து போராடிய சூர்யகுமார் யாதவ் கடைசியாக 2022 ஆம் ஆண்டு பட்டாசு போல் களத்தில் வெடித்தார். இதன் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யகுமார் யாதவ், இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு முடிவுரை எழுதினார்.
சாதாரண வீரராக 2022 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்த சூர்யகுமார் யாதவுக்கு இறுதியில் டி20 அணியின் துணை கேப்டன் என்ற பதவி கிடைத்தது. சூர்யகுமார் யாதவும் 2022 ஆம் ஆண்டில் 31 சர்வதேச t20 போட்டியில் விளையாடி 1164 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் இரண்டு சதங்களும் ஒன்பது அரை சதங்களும் அடங்கும்.சூர்யகுமார் ஸ்டிரைக் ரேட் 187 என்று அளவில் இருக்கிறது.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைத்தார்.மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 12 மாதங்களிலே தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் விளையாடிய டாப் 4 இன்னிங்ஸ் குறித்து தற்போது பார்க்கலாம்.

சூர்யகுமார் 68
டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் அதுவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 68 ரன்கள் சேர்த்ததை ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இந்திய அணியின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா,விராட் கோலி ஆகிய மூன்று வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் மட்டும் வேறு கிரகத்திலிருந்து வந்தது போல் அதிரடியை காட்டினார். கடினமான ஆடுகளத்தில் 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்க்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் என்ற இலக்கை கௌரவமாக எட்டியது.

சூர்யகுமார் 61
v இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ், கவுகாத்தியில் விளையாடிய ஆட்டம் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு அமைந்தது. அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும் , 5 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.இதனை துரத்திய தென்னாபிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சூர்யகுமார் 117
சூர்யகுமார் யாதவ்-ன் டாப் இன்னிங்ஸாக பார்க்கப்படுவது இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 போட்டியில் சதம் விளாசியதை தான். இந்திய அணி தொடரை வென்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 31 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 216 ரன்கள் என்ற இலக்கை தொட்டும் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. எனினும் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.

சூர்யகுமார் 111
இதேபோன்று 2022 ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் சூர்யகுமார் யாதவ் 11 பவுண்டரிகளையும் , ஏழு சிக்ஸர்களையும் விளாசினர்.இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதன் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை சூர்யகுமார் யாதவ் உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications