Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசியின் முதல் 'தமிழ் சேர்மன்' ஆனார் சீனிவாசன்!

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் ஆன என்.சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் சேர்மன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

மெல்போர்ன் நகரில் இன்று நடந்த ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் சீனிவாசன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் குட்டுப்பட்டு பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் சீனிவாசன். தற்போது இவர் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் ஆகியுள்ளார்.

தலைவர் பதவி நீக்கப்பட்டு

தலைவர் பதவி நீக்கப்பட்டு

ஐசிசியில் இதுவரை இருந்து வந்த தலைவர் பதவி நீக்கப்பட்டு சேர்மன் பதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் சேர்மனாக சீனிவாசன் தேர்வாகியுள்ளார்.

புகார் பின்னணியில்

புகார் பின்னணியில்

சர்ச்சைக்குரிய புகார் பின்னணியில் ஐசிசியின் முதல் சேர்மனாக சீனிவாசன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதமே

கடந்த பிப்ரவரி மாதமே

கடந்த பிப்ரவரி மாதமே, சீனிவாசன் தான் முதல் சேர்மன் என்பதை ஐசிசி அறிவித்து விட்டது. இன்று அதன் இறுதிக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக சேர்மனாகியுள்ளார் சீனிவாசன்.

பிசிசிஐக்கு கூடுதல் அதிகாரங்கள்

பிசிசிஐக்கு கூடுதல் அதிகாரங்கள்

இதற்கிடையே, ஐசிசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீரமைப்பு நடவடிக்கைகளின் மூலமாக, பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஐசிசி வாரியம்தான்

ஐசிசி வாரியம்தான்

தற்போது ஐசிசி வாரியம்தான் அனைத்து கொள்கை முடிவுகளையும் எடுக்கும். அதன் தலைவராகத்தான் தற்போது சீனிவாசன் உருவெடுத்துள்ளார்.

செயற்குழு

செயற்குழு

மேலும், புதிய செயற்குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும். இது வாரியத்திடம் தனது பணிகளை தெரிவித்து செயல்படும். இந்த புதிய செயற்குழுவின் தலைவராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரயித்தின் வாலி எட்வர்ட்ஸ் நியமிக்கப்படுகிறார்.

பதவிக்காலம்

பதவிக்காலம்

நிதி மற்றும் வர்த்தக விவகார கமிட்டியின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கில்ஸ் கிளார்க் செயல்படுவார். இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக இருக்கும்.

Story first published: Thursday, June 26, 2014, 20:07 [IST]
Other articles published on Jun 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+