இங்கிலாந்தின் 22 வயது கிரிக்கெட் வீரர் மர்ம சாவு
லண்டன்: இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22.
மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேத்யூ ஹாப்டன் சிறந்த இளம் கிரிக்கெட்வீரர். பிற வீரர்களால் அவர் மிகவும் மதிக்கப்படுவார் என்று இங்கிலாந்து வேகப்பந்து பயிற்சியாளர் கெவின் ஷைன் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மேத்யூ ஹாப்டன், சாவுக்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Story first published: Monday, January 4, 2016, 13:21 [IST]
Other articles published on Jan 4, 2016


Click it and Unblock the Notifications