Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB கேப்டனாக திரும்பிய விராட் கோலி.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..பஞ்சாப் அணியில் அதிர்ச்சி நீக்கம்

மொஹாலி : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மொஹாலியில் இன்று ஆர்சிபி அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார்.

சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தின் போது டுபிளஸிஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய விராட் கோலி, டுபிளஸிஸ் இன்று பேட்டிங் மட்டுமே இம்பேக்ட் வீரராக செய்வார் என்றும், இதனால் தாம் கேப்டன் பணியை செய்வதாக கூறினார்.

Sweet Suprises as Virat kohli take charge as RCB Captain for todays game

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை முடிவு செய்தது. இது குறித்து பேசிய விராட் கோலி, தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆடுகளம் தோய்வாக மாற வாய்ப்புள்ளது, பெரிய ஸ்கோர் அடித்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கூறினார்.

டுபிளசிஸ் இம்பாக்ட் வீரராக விஜய குமார் விஸ்யாக்கிற்கு பதிலாக விளையாடுவார் என்றும் கோலி கூறினார்.இதே போன்று பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாததால், சாம் கரண் கேப்டனாக பணிபுரிகிறார்.

Sweet Suprises as Virat kohli take charge as RCB Captain for todays game

மேலும் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன், பஞ்சாப் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று கடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ரபாடா இன்றைய ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதே போன்று கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த சிக்கந்தர் ராசாவுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Thursday, April 20, 2023, 15:33 [IST]
Other articles published on Apr 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+