For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஸ்பான்சராக ஸ்விக்கி நிறுவனம்.. ரசிகர்களை கவர பெரும் முயற்சி.. ஒப்பந்தம் எத்தனை கோடி தெரியுமா?

மும்பை: ஐபிஎல் 2022ம் ஆண்டு தொடருக்குள் ஸ்விக்கி நிறுவனம் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகா ஏலம், புதிய அணிகள் என இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

போட்டியின் விதிமுறைகளை போன்று ஸ்பான்சர்ஷிப்களிலும் புதிய நிறுவனங்கள் ஒப்பந்தமாகியுள்ளன.

டி20ல் 150 ரன்கள் விளாசல்.. கெயில் தம்பியாக மேக்ஸ்வெல் மரண அடி.. ஐபிஎல்-ல் கம்பேக் உறுதி!டி20ல் 150 ரன்கள் விளாசல்.. கெயில் தம்பியாக மேக்ஸ்வெல் மரண அடி.. ஐபிஎல்-ல் கம்பேக் உறுதி!

புதிய ஸ்பான்சர்

புதிய ஸ்பான்சர்

ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனம் திடீரென விலகியதால், சமீபத்தில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விவோ நிறுவனம் செலுத்திய அதே தொகைக்கு ஓராண்டிற்கு மட்டும் டாடா நிறுவனம் கையெழுத்திட்டது. இந்நிலையில் ஆன் கிரவுண்ட் ஸ்பான்சர்களும் இணைக்கப்பட்டுள்ளது.

உள்ளே வரும் ஸ்விக்கி

உள்ளே வரும் ஸ்விக்கி

ஏற்கனவே ஐபிஎல் ஆன் கிரவுண்ட் ஸ்பான்சர்களாக டாடா சவாரி, ட்ரீம் 11, அன் அகடாமி, க்ரெட், அப்ஸ்டாக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 6வது ஸ்பான்சராக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டிற்கு ரூ.35 கோடி செலுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஸ்விக்கி - ஐபிஎல் உறவு

ஸ்விக்கி - ஐபிஎல் உறவு

ஸ்விக்கி நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் தொடர் மூலம் தனது வாடிக்கையாளர்களை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒளிபரப்பு ஸ்பான்சராக கடந்தாண்டு பெரும் வியாபார யுக்திகளை கையாண்டு இருந்தது. இதே போல கடந்தாண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் நேரலையின் ஸ்பான்சராக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல்-க்குள் நுழைந்துள்ளது.

என்னவெல்லாம் செய்யலாம்

என்னவெல்லாம் செய்யலாம்

ஆன் கிரவுண்ட் ஸ்பான்சர்ஸ் என்பது ஆட்டத்தின் போது மைதானங்களை சுற்றியும் விளம்பரம் செய்துக் கொள்ளலாம். டாடா நிறுவனம் தனது காரை மைதானத்தில் நிறுத்தி இருக்கும். அந்தவகையில் ஸ்விக்கி மைதானத்தில் அனைத்து கேரவன்களிலும் பதாகைகளை வைத்து விளம்பரம் செய்யவுள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் குவியலாம்.

Story first published: Wednesday, January 19, 2022, 21:44 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
Swiggy likely to be a on-ground sponsor in IPL 2022, finalises the deal with BCCI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X