Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பந்தில் 3 ரன்கள்.. அவசரப்பட்டு வெற்றியை கொண்டாடிய எதிரணி.. ப்ப்பா என்ன மேட்ச்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெண்கள் பிக்பாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் போட்டி போலவே இதுவும் மிகவும் வைரலாக அங்கு பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் பல வீராங்கனைகள் பெண்கள் அணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த தொடரின் முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் 'தி மெல்போர்ன் ரெனிக்கடேஸ்' மற்றும் 'சிட்னி சிக்ஸர்ஸ்' இரண்டு அணிகளும் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது மொத்த போட்டியும் மாறியுள்ளது.

120 ரன்கள் இலக்கு

120 ரன்கள் இலக்கு

இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய 'தி மெல்போர்ன் ரெனிக்கடேஸ்' மிகவும் அதிரடியாக ஆடியது. தொடக்கத்தில் சென்ற ரன் ரேட் மூலம் 150 ரன்களுக்கும் அதிகமாக எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 'தி மெல்போர்ன் ரெனிக்கடேஸ்' அணி 7 விக்கெடுக்கு 120 ரன்கள் மட்டுமே சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

தேவையில்லாத கொண்டாட்டாட்டம்

தேவையில்லாத கொண்டாட்டாட்டம்

121 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி சிட்னி அணி மெல்போர்ன் அணி போலவே அதிரடியாக ஆடியது. அதேபோல் இந்த அணியும் கடைசி ஓவரில் 7 விக்கெட் எடுத்து இருந்தது. கடைசி பந்தத்தில் 3 ரன் தேவைபட்ட போது சிட்னி வீராங்கனை பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ஆனால் பீல்டர் பந்தை தடுத்து தூக்கி எறிந்துவிட்டார். பந்தை வாங்கிய பவுலர் அதை ஸ்டம்புகளில் அடிக்காமல் கொண்டாடிக் கொண்டு இருந்துள்ளார்.

புதிய முடிவு

இவரின் இந்த கொண்டாட்டத்திற்கு இடையில் சிட்னி வீராங்கனைகள் அடுத்த ரன் ஓடி மேட்சை டிரா செய்துவிட்டார்கள். மெல்போர்ன் அணி வீராங்கனைகள் இதுகுறித்து அம்பயரிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. எனவே மேட்ச் டிரா ஆனதால் சூப்பர் ஓவர் போடப்பட்டது.

ரெனிக்கடேஸ் வெற்றி

ரெனிக்கடேஸ் வெற்றி

இந்த நிலையில் சூப்பர் ஓவரில் சிட்னி அணி 12 ரன்கள் எடுத்தது. மிகவும் திரில்லாக சென்ற சூப்பர் ஓவரில் மெல்போர்ன் அணி எப்படியோ 1 ரன் கூடுதலாக எடுத்து வெற்றிபெற்றது. முதல் முறை செய்த தவறால் போட்டியை டிரா செய்த மெல்போர்ன் கஷ்டப்பட்டு சூப்பர் ஓவரில் வென்றுவிட்டது.

Story first published: Thursday, January 4, 2018, 17:00 [IST]
Other articles published on Jan 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+