For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிளவுஸ் மாட்டினவங்க எல்லாம் விக்கெட் கீப்பிங் பண்ண முடியாது.. முன்னாள் வீரர் அதிரடி!

Recommended Video

Virender sehwag advice's young player rishabh pant to play a good cricket

மும்பை : முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையது கிர்மானி இந்திய அணியில் தோனிக்கு பின் யார் விக்கெட் கீப்பராக இருக்கப் போகிறார்கள்? தோனி ஓய்வு முடிவு குறித்து பேசினார்.

அப்போது கிளவுஸ் அணிந்தவர்கள் எல்லாம் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்பதை குறிப்பிட்டு கூறினார்.

ரிஷப் பண்ட் இன்னும் வளர வேண்டும் என்று கருதும் அவர், தோனி அணியில் தொடர்ந்து ஆட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

தோனி இல்லை

தோனி இல்லை

இந்திய அணியில் தோனி ஓய்வு பெறுவாரா? இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா? என்ற சந்தேக நிலையே உள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி ஓய்வு பெற உள்ளார் என்று வந்த செய்திகள் உண்மையில்லை என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோனி விலகி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் ஆடுகிறார்

ரிஷப் பண்ட் ஆடுகிறார்

ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார். ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டுமே இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.

சாஹாவுக்கு வாய்ப்பு

சாஹாவுக்கு வாய்ப்பு

இந்த நிலையில் தான் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். ரிஷப் பண்ட் சரியான பார்மில் இல்லாத நிலையில் அவரை மூன்று வித கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

தோனி முடிவு

தோனி முடிவு

தோனியின் ஓய்வு முடிவு பற்றி கேட்ட போது, அது அவர் முடிவு. அவரைப் போன்ற புகழ் பெற்ற வீரரை நாம் பார்த்திருக்க முடியுமா? ஓய்வு முடிவை அவர் தான் எடுக்க வேண்டும். நாம் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது. என்றார்.

தோனி ஆட வேண்டும்

தோனி ஆட வேண்டும்

மேலும், இளம் வீரர்களுக்கு தோனி தான் முன் மாதிரி என்று கூறிய அவர், தோனி அணியில் சிறிது காலம் ஆடி அடுத்த கட்ட வீரர்களை தயார் செய்து விட்டு தான் செல்ல வேண்டும் என்றார்.

மாற்றம் நடக்கும்

மாற்றம் நடக்கும்

பாரூக் இன்ஜினியர் ஓய்வு பெற இருந்த போது, அவருக்கு அடுத்து யார் என்றார்கள்? சையது கிர்மானி வந்தார். அடுத்து கிரண் மோரே வந்தார். பின் தோனி வந்தார். அதனால், நிச்சயம் ஒருவர் தோனியின் இடத்திற்கு வருவார் என்றார் கிர்மானி.

இளம் விக்கெட் கீப்பர்கள்

இளம் விக்கெட் கீப்பர்கள்

தற்போது இந்திய அணியில் ஆட 3 - 4 திறமையான விக்கெட் கீப்பர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று ரிஷப் பண்ட் போல உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும் வீரர்கள் பற்றி குறிப்பிட்டார். ஸ்ரீகர் பிரசாத் என்ற இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு இணையாக புகழ் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் கடினம்

மிகவும் கடினம்

விக்கெட் கீப்பிங் பற்றி குறிப்பிட்ட கிர்மானி, அது மிகவும் கடினம். ஆடுகளத்தில் அது கடினமான இடம். போட்டியின் முக்கிய அங்கம். ஒரு ஜோடி கிளவுஸ் அணிந்தவர்கள் எல்லாம் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்று அதிரடியாக கூறினார். அவர் யாரை கூறுகிறார் என்பது தான் தெரியவில்லை.

Story first published: Wednesday, August 28, 2019, 18:16 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
Syed Kirmani says not everyone can do wicket keeping by wearing Gloves
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+