Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 30 நாட்கள்தான்.. இந்திய அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது.. பரபரக்க போகும் களம்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாட்களாக அடுத்த 30 நாட்கள் இருக்க போகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள் என்பது இந்த மாதம் தெரிந்துவிடும்.

கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. முக்கியமாக முதல் தர போட்டிகள் கடந்த ஒரு வருடமாக நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 22 நாட்கள் இந்த போட்டிகள் நடக்க உள்ளது.

ஜனவரி இறுதி

ஜனவரி இறுதி

ஜனவரி இறுதிவரை இந்த கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. மொத்தம் 38 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடக்கும். பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது.

திருவிழா

திருவிழா

இப்போதே இதற்கான பயிற்சிகளை மாநில அணிகள் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு அணியும் 20 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் அடுத்த 30 நாட்கள் இந்திய கிரிக்கெட் உலகம் இந்த கிரிக்கெட் தொடரை உற்றுநோக்கும். உலகக் கோப்பை டி 20 தொடர் இந்த வருடம் நடக்க உள்ளது.

யார்

யார்

இதில் இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்கள் யாரெல்லாம் என்பது இந்த தொடரை பொறுத்தே இருக்கும். இந்திய அணியின் எதிர்காலமும், பல முக்கிய வீரர்களின் எதிர்காலமும் இந்த தொடரை நம்பியே இருக்கிறது. உதாரணமாக மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன்கள்

கேப்டன்கள்

மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக ராகுல் திரிப்பாதி நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக ஜெயதேவ் உனட்கட் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இஷான் கிஷான்

இஷான் கிஷான்

அதேபோல் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷானும், பரோடா அணியின் கேப்டனாக குர்னால் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி பிரபலமான பல வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, பல முக்கியமான வீரர்கள் இந்த தொடரில் விளையாடுகிறார்கள்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடருக்கான சிறிய ஏலம் பிப்ரவரி இறுதியில் நடக்கும். அதன்பின் இங்கிலாந்து தொடருக்கான டி 20 அணி தேர்வு செய்யப்படும். இதை வைத்தே டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும். இதன் காரணமாக இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் அதிக கவனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Story first published: Friday, January 1, 2021, 15:33 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+