Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்தாக் அலி டி20 தொடரிலிருந்து வெளியேறியது தமிழக அணி! CSK பவுலரை சுளுக்கு எடுத்த சௌராஷ்டிரா

மும்பை : சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழ்நாடு அணி வெளியேறி இருக்கிறது. இந்தூரில் நடைபெற்ற குரூப் பி பிரிவில் தமிழ்நாடு அணி, சௌராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய சௌராஷ்ட்ரா அணியில் தொடக்க வீரர் ஹர்திக் தேசாய் 34 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். மான்கட் 43 ரன்கள் ருசித் 30 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க இறுதியில் சமர் காஜார் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

smat 2024 gurjapneet singh ipl auction 2025 ipl

இதன் மூலம் சௌராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே வீரர் குர்ஜப்னீத் சிங் நான்கு ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வரும் சக்கரவர்த்தி விக்கெட் ஏதுமின்றி நான்கு ஓவரில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதனை அடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. இதில் பாபா அப்ரஜித், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ஸ்கோரை மாற்ற முடியாமல் ஆட்டமிழக்க நடு வரிசையில் களமிறங்கிய பூபதி குமார் என்ற வீரர் மட்டும் 44 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.

முஹம்மது அலி 28 ரன்கள் எடுக்க பெரும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாருகான் டக் அவுட் ஆகி வெளியேறினார். கீழ் வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

செளராஷ்டிரா பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிரா அணி வென்றது. இதன் மூலம் தமிழக அணி விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி, நான்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.

Story first published: Tuesday, December 3, 2024, 16:51 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+