Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்டாக் அலி கோப்பையை வென்றது ஜார்க்கண்ட்.. இசான் கிஷன் அதிரடியால் வீழ்ந்த ஹரியானா

மும்பை: சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக ஜார்க்கண்ட் அணி வென்று சாதனை படைத்திருக்கிறது. புனேவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா அணி பலப்பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஜார்க்கண்ட் அணியில் தொடக்க வீரர்கள் இசான் கிஷன்,விராட் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் விராட் சிங் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு குமார் குஷ்கரா, இஷான் கிசன் ஜோடி சேர்ந்தார்.

SMAT 2025

இருவரும் ஹரியானாவின் பந்துவீச்சை சிதறடித்தனர். பவுண்டரி, சிக்ஸர்கள் என விரட்டிய இசான் கிசன் 24 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார். மறுபுறம் குஸ்கரா 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஹரியானா வீரர்கள் தடுமாறினர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய இசான் கிஷன் 49 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று குமார் குஷ்கரா 38 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். அங்குல் ராய் 20 பந்துகளில் 40 ரன்களும் ராபின் மின்ஸ் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஜார்க்கண்ட் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. ஹரியானா பந்துவீச்சில் சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜ் நான்கு ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதை அடுத்து களம் இறங்கிய ஹரியானா அணி 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

தொடக்க வீரர் அங்கீத் குமார் டக் அவுட்டாகி வெளியேறினர். மற்றொரு தொடக்க வீரரான ரங்கா 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். விக்கெட் கீப்பர் பேட்டரான் யாஷ்வர்தன் தலால் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஐந்து சிக்சர், இரண்டு பவுண்டரியை சேர்த்தார். அதேபோன்று முன்னாள் சிஎஸ்கே வீரரான நிஷாந்த் சிந்து 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

சமாண்ட் ஜாகர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதனால் ஹரியானா அணியும் வெற்றிக்காக போராடியது. எனினும் கீழ் வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக ஹரியானா அணி 18.3 ஓவரில் 193 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்கண்ட் அணி முதல் முறையாக சையது முஸ்தாக் அலி கோப்பையை கைப்பற்றியது. பேட்டிங்கில் 101 ரன்கள் குவித்த இசான் கிசன் ஆட்ட நாயகன் விருதையும் மற்றொரு ஜார்கண்ட் வீரரான அங்கிட் ராய் பேட்டிங்கில் 303 ரன்கள், பந்து வீச்சில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

Story first published: Thursday, December 18, 2025, 22:05 [IST]
Other articles published on Dec 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+