Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசியா அறிவிப்பு வந்தாச்சு... ஜனவரியில சையத் முஸ்தாக் அலி தொடர்... அறிவித்த பிசிசிஐ

டெல்லி : கொரோனா காரணமாக ஏறக்குறைய ஒரு ஆண்டாக நடைபெறாமல் இருந்த உள்ளூர் தொடர்கள் சையத் முஸ்தாக் அலி தொடர் மூலம் மீண்டும் துவங்கவுள்ளது.

வரும் ஜனவரி 10ம் தேதி சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் துவங்கவுள்ளதாகவும் 31ம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில் டி20 வடிவத்திலான சையத் முஸ்தாக் அலி தொடரை மேற்கொள்வது சிறப்பானது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

கொரோனா காரணமாக ஏறக்குறைய கடந்த ஒரு ஆண்டு காலமாக உள்ளூர் போட்டிகளை நடத்த முடியாமல் பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த தொடர்களை மீண்டும் துவக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஜனவரி 10ம் தேதி துவக்கம்

ஜனவரி 10ம் தேதி துவக்கம்

இந்நிலையில் தற்போது சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி துவங்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையொட்டி வரும் 2ம் தேதி அனைத்து வீரர்களும் பயோ பபளில் ஈடுபட ஒருங்கிணைய வேண்டும் என்றும் மாநில கிரிக்கெட் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடத்துவது சிறப்பானது

நடத்துவது சிறப்பானது

மேலும் இந்த தொடர் குறித்த தங்களது அபிப்பிராயங்களை தெரிவிக்கவும் மாநில கிரிக்கெட் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த லாக்டவுன் சூழலில் முஸ்தாக் சையத் அலி டி20 தொடரை நடத்துவதே சிறப்பானது என்று அவை தெரிவித்துள்ளன.

ஜனவரி 31ம் தேதி நடைபெறுகிறது

ஜனவரி 31ம் தேதி நடைபெறுகிறது

வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடர் தொடர்ந்து நடைபெற்று ஜனவரி 31ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 20ம் தேதிக்குள் கெஸ்ட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் லாக்டவுன் சூழலில் இந்த தொடரை சிறப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Story first published: Sunday, December 13, 2020, 22:50 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+