Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாரூக்கான் அதிரடி… கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தமிழ்நாடு அணி தகுதி!!!

சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடருக்கு பிறகு பி.சி.சி.ஐ.யால் நடத்தப்படும் பிரதான தொடர் சையது முஸ்தாக் அலி தொடராகும்.

நடப்பு சீசனில் 38 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது இந்த தொடர் நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் படி, டெல்லியில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும்,கேரள அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.ஏனெனில் கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகிளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே 8 முறை வென்றுள்ளது,

கேரளா அதிரடி

கேரளா அதிரடி

இதனையடுத்து களமிறங்கிய கேரள அணி வீரர்கள், ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடினர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாரூதின் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ரோஹன் 51 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேரள அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

கேரள அணியின் ரன் எடுக்கும் வேகத்தை தமிழ்நாடு பந்துவீச்சாளர்கள் குறைக்க முற்பட்டனர்.ஆனால், சச்சின் பேபி 33 ரன்களும்,விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 65 ரன்களும் குவித்தனர். விஷ்ணு வினோத் 7 சிகச்ர்களை விளாசினார்.இதனால் கேரள அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தது. தமிழக அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக பந்துவீசிய முருகன் அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி வீரர்கள் தொடக்கத்தில் தடுமாறினர். ஜெகதீசன் 7 ரன்களில் வெளியேற, பொறுப்பாக ரன் சேர்த்த ஹரி நிஷாந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், சுதர்சன் 3வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். விஜய் சங்கர் (33),சுதர்சன் (46) என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

திருப்புமுனை

திருப்புமுனை

145 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் தமிழக அணி தடுமாறிய போது களத்திற்கு வந்தார் அதிரடி வீரர் ஷாரூக்கான்.18வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை அவர் விளாச, தமிழக அணி அந்த ஓவரில் 19 ரன்களை எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஷாரூக் கான் 9 பந்துகளில் 19 ரன்களும், யாதவ் 32 ரன்களும் எடுக்க, தமிழ்நாடு அணி 3 பந்துகள் எஞ்சிய சிலையில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

Story first published: Thursday, November 18, 2021, 20:21 [IST]
Other articles published on Nov 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+