Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு ஆரம்பம்

ராஞ்சி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி-20 போட்டித் தொடர் நாளை ராஞ்சியில் துவங்குகிறது. இது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சவாலாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது.

இதில், 4-1 என்ற கணக்கில் ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது. டி-20 போட்டித் தொடரின் முதல் ஆட்டம், கேப்டன் கூல் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நாளை நடக்க உள்ளது.

அலர்ஜி ஆஸ்திரேலியா

அலர்ஜி ஆஸ்திரேலியா

டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் வலுவான அணியாக இருந்தாலும், டி-20 போட்டி என்றாலே ஆஸ்திரேலியா அணிக்கு சற்று அலர்ஜிதான்.

சாதகமாக இல்லை

சாதகமாக இல்லை

ஐபிஎல் போட்டிகளில் சில ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடிய அனுபவம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை டி-20 போட்டிகள் சாதகமாக இல்லை.

47ல் வெற்றி 43ல் தோல்வி

47ல் வெற்றி 43ல் தோல்வி

இதுவரை 93 டி-20 போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடியுள்ளது. அதில், 47ல் வெற்றி, 43ல் தோல்வியைக் கண்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரலியா இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்லன. அதில் இந்தியா 9ல் வென்றுள்ளது.

இந்தியாவுக்கு இதுவரை 3ல் வெற்றி

இந்தியாவுக்கு இதுவரை 3ல் வெற்றி

இந்தியாவில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. கடைசியாக நடந்த ஆறு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வென்றுள்ளது.

ஒருதினப் போட்டித் தொடரை வென்ற தெம்பில் இந்திய அணி உள்ளது.

வெற்றியோடு திரும்ப துடிக்கும் ஸ்மித்

வெற்றியோடு திரும்ப துடிக்கும் ஸ்மித்

ஒரு கோப்பையையாவது வென்று திரும்ப முயற்சிப்போம் என்று ஸ்மித் கூறியுள்ளார். அதில் அவ்வளவு உறுதி இல்லை. இதுவே, ஆஸ்திரேலியா இந்தியாவைப் பார்த்து பயந்துள்ளது என்று அதன் கோச் கூறியது நிரூபணமாகிறது. ராஞ்சியைத் தொடர்ந்து, 10ம் தேதி குவஹாத்தியிலும், 13ல் ஐதராபாத்திலும் அடுத்த டி-20 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்

இந்தியா : விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டயா, மனீஷ் பாண்டே, டோணி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல்.

ஆஸ்திரேலியா : ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜாசன் பெக்ரென்டார்ப், டேன் கிறிஸ்டியான், நாதன் கோல்டர்-நைல், பேட்ரிக் கும்மின்ஸ், ஆரோன் பின்ச், டிராவிஸ் ஹெட், மோய்சஸ் ஹென்ரிகியூஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்னே, கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா

Story first published: Friday, October 6, 2017, 12:36 [IST]
Other articles published on Oct 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+