
வரலாற்றை மாற்றியவர்கள்
கிரிக்கெட் வசதி படைத்தவர்களின் விளையாட்டாகவே இருந்தது, ஒரு காலத்தில் ராஜாக்கள், இளவரசர்கள் மட்டும் தான் இந்திய அணியில் இடம்பெற முடியும். பிறகு செல்வந்தர்கள், பிறகு மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலிருந்து வருபவர்களால் தான் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற வரலாறு மாறி, இப்போது குக்கிராமத்தில் உள்ளவர்களும் சாதிக்கலாம் என்ற நிலைக்கு கொண்டு வந்தவர்கள் தோனி, நடராஜன் போன்றவர்கள் தான்.

குடும்ப கஷ்டம்
நடராஜனின் தந்தை நெசவாளர், தாய் சாலையோரத்தில் உணவு விடுதி வைத்திருப்பவர். இவர்களுக்கு பிறந்த 5 குழந்தைகளின் மூத்தவர் தான் நடராஜன். குடும்ப கஷ்டம் ஒரு பக்கம் வாட்டினாலும், உள்ளூரில் கிரிக்கெட் விளையாடி தனது திறமையை வளர்த்து கொண்டவர், கிரிக்கெட் விளையாட இடமில்லை, சரி தொழில்முறை கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாத நிலையில் தான் நடராஜன் இருந்தார்.

ஐ.பி.எல். ஏலம்
தனது நண்பரின் உதவியுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசனில் விளையாடி, மெல்ல மெல்ல தனது பந்துவீச்சால் உயரத்துக்கு வந்தவர் தான் நடராஜன். தமிழ்நாடு பிரிமியர் லீக் நடராஜனுக்கு அடையாளம் தந்தது. இதன் மூலம் 2017 ஐ.பி.எல். ஏலத்தில் பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

நடராஜனின் முடிவு
2018ஆம் ஆண்டிலிருந்து ஐதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், டேவிட் வார்னரின் செல்லப் பிள்ளை ஆனார். இதன் பிறகு 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக விளையாடி விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் முன்னணி பந்துவிச்சாளராக உருவெடுத்தார் நடராஜன். நடராஜனிடம் தற்போது திறமைக்கு ஏற்ப பணம் கிடைத்தாலும், அதில் ஒரு பகுதியை தன்னை மாதிரி வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிக்கும் இளைஞர்களுக்கு செலவு அளிக்க முயன்றார்.

நடராஜனின் மைதானம்
இதற்காக சேலம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் அகாடமியை நிறுவ முயற்சி எடுத்தார் நடராஜன். அதில் இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக தனது சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளார் நடராஜன். இனி அங்குள்ள இளைஞர்கள் நடராஜன் மாதிரி கஷ்டப்படாமல், அந்த மைதானத்தில் வந்து பயிற்சி எடுத்து கொள்ளலாம். நடராஜின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்தி வருகின்றனர். தற்போது காயத்தில் இருக்கும் நடராஜன் மீண்டும் இந்திய அணிக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications