Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேலத்து சிங்கம் நடராஜனுக்கு என்னாச்சு..?? தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்

தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர், சர்வதேச கிரிக்கெட் தொடர் என கலக்கினார்

அடிமட்டத்திலிருந்து உயரத்திற்கு சென்ற நம்ம வீட்டு பிள்ளை போன்ற தோற்றத்தில் இருக்கும் நடராஜனை, தமிழக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இப்படி.. புகழ்பெற்ற நடராஜன் தற்போது தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நடராஜனின் இந்த வீழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று..

 வார்னர்

வார்னர்

தமிழக வீரர் நடராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதனால் வார்னரின் செல்லப்பிள்ளை ஆனார் நடராஜன். நடராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அவர் கூறினார்

 இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

நடராஜனின் இந்த செயல்பாட்டால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலக்கினார் நடராஜன். இதன் பின் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு பாராட்டுகள் குவிந்தது

காயம்

காயம்

இதன் பின்னர் மீண்டும் ஐ.பி.எல். தொடரில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது.இதனையடுத்து நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் எவ்வித சர்வதேச போட்டியிலும் விளையாடமால் நடராஜன் ஓய்வில் இருந்தார்

கொரோனா

கொரோனா

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் யு.ஏ.இ.நாட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது பாதியில் பங்கேற்க தயாராக இருந்தார் நடராஜன். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காமல் இருந்த நடராஜன், சையது முஸ்தாக் அலி தொடரில் களமிறங்கினார். ஆனால் அவரால் பழைய படி பந்துவீச முடியாததால் காலிறுதியில் அவருக்கு தமிழக அணியில் களமிறங்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 30 வயதான நடராஜன் முன்பு போல் தடைகளை உடைத்து மீண்டும் அணிக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Wednesday, November 24, 2021, 21:29 [IST]
Other articles published on Nov 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+