Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட் கம்மின்ஸ், பட்லர் எந்த பள்ளியில் ஹிந்தி படித்தார்கள்? நடராஜன் பேச்சுக்கு திமுக நிர்வாகி பதிலடி

சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தமக்கு ஹிந்தி தெரியாததால் ஐபிஎல் போட்டியின் பங்கேற்கும் போது கஷ்டப்பட்டதாக கூறியது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஹிந்தி தெரியாததால் ஐபிஎல் அணியில் உள்ள வீரர்களிடம் பேச கஷ்டப்பட்டேன் என்றும் எப்போதும் தனிமையில் இருப்பேன் என்றும் நடராஜன் கூறியிருந்தார்.

இதனால் மாணவர்கள் இளம் வயதிலேயே எந்த தயக்கமும் இன்றி ஹிந்தி பேச தொடங்க வேண்டும் என்றும் நடராஜன் கூறியிருந்தார். நடராஜனின் இந்த கருத்து கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ஒரு சிலர் நடராஜன் சொல்வது சரிதான் என்று கூறி வருகின்றனர்.

T Natrajan Hindi cricket DMK

ஆனால், பெரும்பாலான ரசிகர்கள், ஆங்கிலமே போதுமானது என்றும் ஹிந்தி எதற்கு நடராஜன் கற்க வேண்டும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி சமூக வலைத்தளத்தில் நடராஜனுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதில் நீங்கள் எங்களுக்கு எப்போதுமே தங்கராஜ் நடராஜன் தான்.

ஆனால் சிலருக்கு நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு நட்டு என்று தான் அழைப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் விளையாட வருகின்ற வெளிநாட்டு வீரர்களான பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், டிராவிஸ்,ஹெட் பட்லர்,பில் சால்ட் ஆகியோர் எந்த பள்ளியில் ஹிந்தி படித்தார்கள் என்று தெரியவில்லையே என்று ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோன்று உங்களுக்கு ஹிந்தி தெரியாததால் தான் தொடர்ந்து தங்களுக்கு இந்திய அணியில் இடம் தரவில்லையா என்றும் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பு உள்ளார். இதேபோன்று சேலத்தில் அடகு கடை வைத்திருக்கும் சேட்டுக்கு ஹிந்தி நன்றாக தெரியுமே என்று குறிப்பிட்டுள்ள ராஜீவ் காந்தி, அவர்கள் ஏன் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

T Natrajan Hindi cricket DMK

நடராஜன் போலவே வெளிநாட்டு வீரர்களுக்கும் ஹிந்தி தெரியாது. ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றும் இதன் காரணமாக நடராஜன் ஏன் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பேசக்கூடாது என்று பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பல வட இந்திய வீரர்களும் ஏன் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளாமல் அடுத்தவர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தமிழர்கள், ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2024, 12:37 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+