உலகக்கோப்பை ரேஸில் டி.நடராஜன்.. பிசிசிஐ-ன் மௌனத்திற்கு இதுதான் காரணமா?.. சாதித்த தமிழக புயல்!
மும்பை: டி20 உலகக்கோப்பைகான ரேஸில் டி.நடராஜனுக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள சூழலில் இன்னும் பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.
வெறும் 14 வீரர்களுடன் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி டெத் ஓவர் பவுலர் இன்றி திணறி வருகிறது.

பும்ராவின் மாற்று
பும்ராவுக்கு மாற்று வீரர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வந்தன. இவர்கள் இருவருமே முழு உடற்தகுதி பெற்றுவிட்ட போதும் இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணம் புரியாமல் தான் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

என்ன காரணம்
இந்நிலையில் பிசிசிஐ-ன் மௌனத்திற்கு டி.நடராஜன் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவை போன்று டி.நடராஜனின் பவுலிங் ஸ்டைலுக்கும் ஆஸ்திரேலிய களம் மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும். வேகமாக ஆஸ்திரேலிய களத்தில் நடராஜன் வீசும் யார்க்கர் சரியாக அமைந்துவிட்டால் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இதே போல அவர் ஸ்லோ பால்களையும் நேர்த்தியாக வீசுவார் என்பதால் நடராஜனின் ஃபார்மை பார்க்க பிசிசிஐ காத்துள்ளது.

சாதித்த நடராஜன்
இந்தியாவில் சையது முஷ்டக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கியுள்ள நடராஜன் இன்று ஒடிசா அணிக்கு எதிராக பந்துவீசினார். மிகச்சிறப்பாக செயல்பட்ட அவர் 4 ஓவர்கள் வீசி 32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

கடைசி வாய்ப்பு
அடுத்த போட்டியிலும் நடராஜன் இதே போல செயல்பட்டால் அவரை பும்ராவுக்கு மாற்று வீரராக பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி மாற்று வீரரை அறிவிப்பதற்கு வரும் அக்டோபர் 15ம் தேதி தான் கடைசி நாளாகும். எனவே விரைவில் இறுதி முடிவு தெரியவரும்.


Click it and Unblock the Notifications