Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஃபார்முக்கு வந்தும் வாய்ப்பில்லை”.. நியூஸி, தொடரில் நடராஜன் புறக்கணிப்பு.. காரணம் என்ன?

அமீரகம்: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தமிழக வீரர் டி.நடராஜன் ஃபிட்னஸ் இருந்தும் புறக்கணிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறிவிட்டது.

இதனால் தற்போது அனைவரின் கவனமும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் மீது திரும்பியுள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி, அடுத்ததாக இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகளும் 2 டெஸ்ட் போட்டிகளும் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.

 மும்முரம் காட்டும் பிசிசிஐ

மும்முரம் காட்டும் பிசிசிஐ

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதமாக பயோ பபுளில் இருந்த விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பட்டியல்

இந்திய அணி பட்டியல்

இந்திய டி20 அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

நடராஜன் ஏன் இல்லை

நடராஜன் ஏன் இல்லை

இந்த பட்டியலில் பவுலர் டி.நடராஜன் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் போது முழங்கால் காயத்தால் நடராஜன் அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், அவரால் பழைய ஃபார்மில் பந்துவீச முடியவில்லை. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை வாரி வழங்கி வருகிறார். இதன் காரணமாகத்தான் அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

Story first published: Wednesday, November 10, 2021, 20:29 [IST]
Other articles published on Nov 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+