T10 தொடரால் நன்மையா? தீமையா? கிரிக்கெட்டையே அழிக்க பார்க்கிறாரா ஜெய்ஷா? ப்ளீஸ் வேண்டாம்
மும்பை : நிலையாக இருக்கும் அனைத்துமே அழிந்து விடும் மாறிக்கொண்டே இருப்பது தான் எப்போதுமே நிலைத்து நிற்கும் என்பது பழமொழி. அதற்கு ஏற்ப கிரிக்கெட் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது.
முதலில் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நாள் ஓய்வு என சேர்த்து ஆறு நாட்கள் நடைபெற்றது.பின்பு அந்த ஓய்வு நாளை நீக்கிவிட்டு ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளாக மாற்றினார்கள். அதன் பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து பிறந்தது தான் 60 ஓவர் ஒரு நாள் போட்டிகள்.

60 ஓவர்கள் வைத்து ஒரே நாளில் போட்டியின் நடத்து முடித்தார்கள். இந்த 60 ஓவர் ஒருநாள் போட்டியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது தான் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இது கிரிக்கெட்டையே பிற்காலத்தில் ஆட்கொண்டு பல ரசிகர்களை ஈர்த்தது. ஆனால் காலத்திற்கு ஏற்ப மீண்டும் தன்னை ஒரு முறை மாற்றி கொண்ட கிரிக்கெட், 50 ஓவரில் இருந்து 20 ஓவர் போட்டியாக மாறியது.
இப்படி மாறியவுடன் கிரிக்கெட்டை பாரம்பரியமாக விளையாடும் நாடுகளை விட வெளிநாட்டினர் பலரும் இந்த போட்டியை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க நாடுகளும்,ஆப்பிரிக்க நாடுகளும் அதிக அளவில் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இப்படி மாற்றம் நல்லதாக இருக்கலாம்.
ஆனால் ஒரே அடியாக மாறினால் இயல்பு என்று ஒன்று இல்லாமலே போய்விடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. டி20 போட்டி தற்போது விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில் வியாபாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டிடன் போட்டிகளை நடத்தினால் அது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் ரசிகர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஒரு இன்னிங்ஸ்க்கு பத்து ஓவர் என போட்டியை 120 முதல் 140 நிமிடங்களில் இந்த போட்டியை நடத்தி முடித்து விடலாம். இதன் மூலம் பிசிசிஐ வருமானத்தை பெற்றாலும் கிரிக்கெட்டின் அடி நாதமே இது போன்ற புதுமையான வடிவம் அழித்துவிடும் என்பது தான் கிரிக்கெட் வல்லுனர்களின் அச்சம் ஆகும். சுமார் 140 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் உலகின் நம்பர் 2 விளையாட்டாக விளங்கி வருகிறது. அதற்குக் காரணம் மற்ற விளையாட்டில் இல்லாத புதுமைகள் கிரிக்கெட்டில் இருப்பது தான்.
பேட்டிற்கும், பந்திருக்கும் சமநிலையில் போட்டி இருப்பதும் கிரிக்கெட் உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கு ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால் டி10 போட்டிகள் வந்துவிட்டால் வெறும் பவுண்டரி சிக்ஸர் மற்றும் விக்கெட் என போட்டி முற்றிலும் மாறிவிடும். இது ரசிகர்களுக்கு ஒரு விதமான அயற்சியை ஏற்படுத்தி விடும்.
இதைத்தவிர டிடன் போட்டிகள் தற்போது பிரபலமாக இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு வடிவத்தை புகுத்தினால் எப்படி 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது அழியும் தருவாயில் இருக்கிறதோ அதேபோல் டி20 போட்டியும் அழிந்துவிடும் இன்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
20 ஓவர்கள் இருக்கும் போட்டியை நாளை 10 ஓவராக மாற்றினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதை பத்து ஓவரிலிருந்து 5 ஓவராகவும் பிறகு ஐந்து ஓவர்கள் இருந்து ஒரு ஓவராகவும் குறைத்து கிரிக்கெட்டையே அழித்துவிடுவார்கள் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓவர்களை இதற்கு மேல் குறைக்க கூடாது என்றும் ரசிகர்கள் விமர்சித்து இருக்கிறார்கள்.
Story first published: Friday, December 15, 2023, 16:23 [IST]
Other articles published on Dec 15, 2023


Click it and Unblock the Notifications