Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னய்யா இது? நாலே ஓவர்ல மேட்ச் முடிஞ்சுருச்சு!? 16 பந்தில் 74 ரன்கள் எடுத்த வீரர்

ஷார்ஜா : டி10 லீக் என்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஷாசாத் அதிரடியாக ஆடி கிரிக்கெட் உலகை மிரட்டியுள்ளார்.

சிந்திஸ், ராஜ்புட் இடையே நடைபெற்ற போட்டியில், ஷாசாத் ராஜ்புட் அணிக்காக ஆடினார்.

சிந்தி அணி 10 ஓவர்களில் எடுத்த ரன்களை ராஜ்புட் அணி நான்கே ஓவர்களில் எட்டியது. அதற்கு ஷாசாத் ஆடிய அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்தது.

பத்து ஓவர் போட்டிகள்

பத்து ஓவர் போட்டிகள்

டி10 லீக் தொடர் பத்து ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுகிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சிந்தி அணியும், ராஜ்புட் அணியும் மோதின. முதலில் ஆடிய சிந்தி அணி 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது.

ஷேன் வாட்சன் 42 அடித்தார்

சிந்தி அணியில் ஷேன் வாட்சன் 20 பந்துகளில் 42 ரன்கள் அடித்து மிரட்டினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை எடுத்தாலும், அந்த அணி 10 ஓவர்களில் 94 ரன்களை எடுத்தது.

இது என்ன பிஸ்கோத்து

இது என்ன பிஸ்கோத்து

அடுத்து ஆடிய ராஜ்புட் அணியில் மெக்குல்லம், ஷாசாத் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்குல்லம் 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். ஆனால், "இது என்ன பிஸ்கோத்து" என்பது போல ஷாசாத் 16 பந்துகளில் 74 ரன்கள் அடித்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார்.

ஒரு பந்தை கூட வீணடிக்கவில்லை

ஒரு பந்தை கூட வீணடிக்கவில்லை

ஷாசாத் தான் சந்தித்த 16 பந்துகளில் ஒரு பந்தை கூட வீணடிக்கவில்லை. 16 பந்துகளில், 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்த ஷாசாத், இரண்டு ஒற்றை ரன்களும் எடுத்தார். மெக்குல்லம் உடைய ஸ்ட்ரைக் ரேட் 262.50 ஆக இருந்தது. ஷாசாத் உடைய ஸ்ட்ரைக் ரேட் 462.50 ஆக இருந்தது.

ஷாசாத் விடுத்த எச்சரிக்கை

ஷாசாத் விடுத்த எச்சரிக்கை

ஷாசாத் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்புட் அணி நான்கே ஓவர்களில் 94 ரன்களை கடந்து வென்றது நிச்சயம் பெரிய சாதனை தான். பந்துவீச்சாளர்கள் தான் ரொம்ப பாவம். இதில் அதிகம் ரன் கொடுத்தது இலங்கையின் திசாரா பெரேரா தான். ஒரே ஓவரில் 30 ரன்கள் கொடுத்தார் அவர். ஆப்கன் வீரர் ஷாசாத் கிரிக்கெட் உலகுக்கு தன் அதிரடி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Thursday, November 22, 2018, 18:03 [IST]
Other articles published on Nov 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+