For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் போட்டியின் போது சில்மிஷம்.. வீடியோவில் அம்பலமான ரசிகரின் மோசமான செயல்.. இணையத்தில் வைரல்!

இங்கிலாந்து: கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர் ஒருவர் அருகில் இருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போதுதான் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மீண்டும் முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அங்கு கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்துள்ளன.

தவறாக நடந்த ரசிகர்

தவறாக நடந்த ரசிகர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ரசிகர்கள் இல்லாததால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் இங்கிலாந்தில் தற்போது ஒவ்வொரு போட்டிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளின் போது ரசிகர்கள் சேட்டைகளில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வரும் விஷயம் தான். ஆனால் ஒரு ரசிகரோ எந்தவித அச்சமும் இன்றி அருகில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேமராவில் பதிவு

அப்பெண், பின்னால் இருந்த நபர்களிடம் பேச எழுந்து நின்று சற்று சாய்ந்த நிலையில் இருந்த போது, அந்த நபர் தவறான காரியத்தில் ஈடுபட்டது அப்படியே கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட, இப்போது அந்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மன்னிக்க முடியாது

மன்னிக்க முடியாது

இந்நிலையில், இந்த அருவருக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்ட நபர் அப்பெண்ணின் கணவரா, அல்லது காதலரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது அவர்கள் இருவரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அந்த பெண்ணுக்கு தெரிந்தவராகவே இருந்தாலும், பொதுவெளியில், அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பார்க்கும் கிரிக்கெட் நடந்துக் கொண்டிருக்கும் போது பட்டப் பகலில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

போய் வேலைய பாருங்க

போய் வேலைய பாருங்க

அதேசமயம், இதிலென்ன தவறு என்று கேட்கும் குரூப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் அப்படியொரு செயலை செய்த போது, அப்பெண்ணே அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்ததாக தெரியவில்லை. அப்படி இருக்கும் போது, இதை ஏன் கைது லெவலுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். பேசமா போய் வேலைய பாருங்க என்ற தொனியிலும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, June 30, 2021, 14:29 [IST]
Other articles published on Jun 30, 2021
English summary
t20 blast fan misbehavior woman demand arrest - கிரிக்கெட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+