கிரிக்கெட் போட்டியின் போது சில்மிஷம்.. இணையத்தில் அம்பலமான ரசிகரின் மோசமான செயல்.. வைரலாகும் வீடியோ!
இங்கிலாந்து: கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மீண்டும் முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் அங்கு கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்துள்ளன.

ரசிகர்களுடன் கிரிக்கெட்
கொரோனா ஊரடங்கால் பல நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ரசிகர்கள் இல்லாததால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வந்தது. எனினும் இங்கிலாந்தில் தற்போது ஒவ்வொரு போட்டிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளின் போது பார்வையாளர்கள் சேட்டைகளில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வரும் விஷயம் தான். ஆனால் ஒரு ரசிகரோ வெட்ட வெளியில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரசிகரின் சில்மிஷம்
இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் உள்நாட்டு டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த ஜூன் 16ம் தேதி சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் போது பெண் பார்வையாளர் ஒருவர் தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்த நபர்களிடம் எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த ஒருவர், அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டது அம்பலம் ஆகியுள்ளது.
வைரலாகும் வீடியோ
இதனை யாரும் கவனிக்கவில்லை என அந்த நபர் எண்ணினாலும், சிலர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கோரிக்கை
கிரிக்கெட் போட்டிகளை எந்தவித ஆரவாரமும் இங்கிலாந்து ரசிகர்கள் அமைதியாக கண்டுகளிப்பார்கள் என்பதை பலரும் கேட்டு அறிந்திருப்போம். ஆனால் ஆரவாரம் செய்தால் கூட பரவாயில்லை, பொது இடத்தில் இது போன்று தவறாக நடந்துக்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications