Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டியில் 506 ரன்கள் குவிப்பு.. பல்வேறு சாதனைகள் முறியடிப்பு.. இங்கிலாந்தில் ரன் விருந்து

லண்டன் : இங்கிலாந்தில் உள்ளூர் பிரதான டி20 தொடராக கருதப்படும் டி20 பிளாஸ்ட் லீக் ஆட்டம் ஒன்றில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டது. லண்டனை சேர்ந்த பிரதான அணிகளான சர்ரே மற்றும் மிடில் செக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மிடில் செக்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிமெண்ட் தரை போல் ஆடுகளம் இருந்ததால், பந்து பேட்டில் பட்டாலே பவுண்டரி என்ற வகையில் ஆட்டம் இருந்தது.

சர்ரே அணியின் தொடக்க வீரர் வில் ஜாக்ஸ், லாரி எவன்ஸ் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் வில் ஜாக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 45 பந்துகளில் வில் ஜாக்ஸ் 96 ரன்களை விளாசினார்.

T20 Blast - Middle sex scored record chase vs surrey

இதில் 7 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதே போன்று மற்றொரு தொடக்க வீரரான லோரி எவன்ஸ் 37 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் சர்ரே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது.

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில் செக்ஸ் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக ஜோடி சேர்ந்த ஸ்டீபன் எஸ்கினாசி, மற்றும் ஜோ கிரான்னேல் அதிரைடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி பவர்பிளே முடிவதற்குள் 80 ரன்கள் மேல் குவித்து ஆட்டமிழந்தது.

கிராக்னல் 16 பந்தில் 36 ரன்கள் எடுக்க, ஸ்டீபன் எஸ்கினாசி 39 பந்தில் 73 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் களமிறங்கிய மேக்ஸ் ஹோல்டன் 35 பந்தில் 68 ரன்கள் சேர்க்க, ரியான் ஹிக்கின்ஸ் 24 பந்தில் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மிடில் செக்ஸ் அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 254 ரன்களை சேர்த்தது, இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த வீரர் என்ற பெருமையை மிடில் செக்ஸ் அணி பெற்றது. டி20 பிளாஸ்டிக் இது தான் அதிகபட்ச டி20 ஸ்கோராகும்.

Story first published: Friday, June 23, 2023, 15:19 [IST]
Other articles published on Jun 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+