Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை.. 3வது முறையாக இந்தியா சாம்பியன்! அபாரம்

பெங்களூரு : பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோதின.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடியது.

2012 மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையிலும் இந்திய அணியே கோப்பையை வென்றது.

 எப்படி விளையாடப்படும்?

எப்படி விளையாடப்படும்?

கண் பார்வை குன்றிய மற்றும் முற்றிலும் இழந்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். பந்தை பார்க்க முடியாது என்பதற்காக மணிகள் அடங்கிய ஒலியை ஏற்படுத்தும் வித்தியாச பந்து இந்தப்போட்டியில் பங்கேற்கப்படும். பந்து ஏற்படுத்தும் சத்தத்தை வைத்து பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பார்கள்.

 விசா சிக்கல்

விசா சிக்கல்

அண்டர் ஆர்ம் வகை பந்து தான் இதில் வீசப்படும். இந்த கிரிக்கெட்டில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இதனையும் பிசிசிஐக்கு கீழ் கொண்ட வர, கங்குலி தலைவராக இருந்த போது நடவடிக்கை எடுத்தார். இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா முதலில் விசா வழங்காமல், பின்னர் எழுந்த எதிர்ப்பால் அனுமதி வழங்கியது.

 அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

எனினும், இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கேற்றாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலில் பேட் செய்த இந்திய அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து சுனில் ரமேஷ் மற்றும் அஜய் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சுனில் ரமேஷ் 63 பந்தில் 136 ரன்களும், அஜய் குமார் 50 பந்தில் 100 ரன்களும் எடுத்தனர்.

 இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 247 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய பார்வையற்ற வீரர்களுக்கான அணி 277 ரன்களை விளாசியது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பந்துவீச்சு தரப்பில் லலித் மீனா, ராஜூவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Saturday, December 17, 2022, 17:05 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+