Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை அணியை விட்டு அனுப்ப சொன்னார்கள்.. தோனி தான் மிரட்டி காப்பாற்றினார்! பாக்.வீரர் கருத்து

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றதை எடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் வந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

35 வயது ஆன விராட் கோலி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த முடிவை தாம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 15 ஆண்டுகளாக நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலி விளங்கி வருகிறார்.

T20 India champion- MS Dhoni is the only captain responsible for virat kohli growth says umar akmal

ஆனால் விராட் கோலிக்கு ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. விராட் கோலியை தேர்வு செய்ய பலரும் பிசிசிஐயில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்த நிலையில் ரஞ்சி போட்டியில் தன்னுடைய திறமையை அவர் நிரூபிக்காமல் இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதை மீறி விராட் கோலியை தோனி தேர்வு செய்தார். அதன் பிறகு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை விராட் கோலி இழந்த நிலையில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். அப்போது விராட் கோலி மீண்டும் வேண்டும் என அடம்பிடித்து தோனி அணியில் இடம் கொடுத்திருக்கிறார்.

அப்போது ஒரு சில போட்டிகளில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், தாமும் தோனியும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம்.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் தோனியிடம் வந்து விராட் கோலியை அணியை விட்டு நீக்குங்கள்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது என்று தோனியிடம் சொன்னார். அதற்கு தோனி தாராளமாக விராட் கோலியை அணியை விட்டு தூக்குங்கள். ஆனால் கேப்டன் ஆகிய நானும் இந்த தொடரில் விளையாட மாட்டேன் என்று மேல் இடத்தில் சொல்லிவிடுங்கள் என்று கறாராக பேசினார். இதனால் தான் விராட் கோலி தொடர்ந்து அணியில் இருந்து தன்னுடைய திறமையை நிரூபித்ததாக உமர் அக்மல் கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, July 1, 2024, 15:19 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+