For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 போட்டிகளால் இந்திய வீரர்களின் ஆட்டம் வீணாகியது: இம்ரான் கான் குற்றசாட்டு

By
Imran Khan
லண்டன்: டி20 போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளனர்.

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் தொடர் தோல்விகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். சிலர் இந்தியாவிற்கு ஒய்வு தேவை என்றும், சிலர் அனுபவ வீரர்களின் காயம் என்றும், சிலர் தேர்வு கமிட்டியையும் குற்றசாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியதாவது, ஐ.பி.எல். போன்ற குறுகிய ஓவர்களை கொண்ட போட்டிகளால் இந்திய அணியின் திறமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளின் மூலம் தான் ஒரு கிரிக்கெட் வீரர் தனது திறமை வெளிக்காட்ட முடியும். அணியின் பந்துவீச்சு தான் போட்டிக்கு முக்கியம். பந்துவீச்சு பாதிக்கப்படும் நிலையில் பேட்டிங்கையும் பாதிக்கும்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளையாடும் ஒரு அணி, ஒருநாள் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ஒரு அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது அத்தனை எளிதல்ல.

ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணியின் அல்லது ஒவ்வொரு வீரரின் திறனும் சோதிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்களை வீழ்த்துவது மிக கடினம். இந்திய வீரர்களுக்கு டி20 போட்டிகளால் ஓய்வு குறைந்துவிட்டது.

இங்கிலாந்தில் தோல்வியை தழுவ இதுவும் ஒரு காரணம். வரும் காலங்களில் வீரர்களுக்கு தகுந்த ஓய்வு அளிக்க வேண்டும், என்றார்.

இந்திய வீரர் பட்டோடியின் மரணம் குறித்து இம்ரான் கான் கூறுகையில், பட்டோடி மருத்துவமனையில் இருக்கிறார் என்ற கேள்விப்பட்டு கடும் துயரத்திற்குள்ளானேன். கிரிக்கெட் போட்டியில் ஒரு கண் வைத்து கொண்டு பேட்டிங் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை கிரிக்கெட் விளையாடி பழக்கமுள்ள ஒருவருக்கு கட்டாயம் புரியும்.

அதிலும் வேகபந்து வீச்சுகளை சந்திப்பது மிகவும் கடினம். ஒரு கண்ணை வைத்து கொண்டு விளையாடியுள்ள பட்டோடியின் திறமையை அதன்மூலமே புரிந்து கொள்ளலாம். அவரது ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் மக்களையும் கவர்ந்தவர், என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:50 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
Pakistan former captain Imran Khan has said that, Indian team lost its ability due to T20 matches. He also showered praise on Mansoor Ali Khan Pataudi, hailed him as a talented cricketer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+