Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறக்க முடியுமா? 2 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவை கரை சேர்த்த கௌதம் கம்பீர்!!

நியூடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக நீண்ட காலம் ஆடி வந்த கெளதம் கம்பீர் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

கம்பீர் ஜனவரி 2013க்கு பின் வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஐபிஎல்-இல் மட்டுமே தொடர்ந்து ஆடி வந்தார். ஆனாலும், இன்னும் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்துள்ளார் கம்பீர்.

கௌதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்வில் ரசிகர்களால் மறக்க முடியாத இரண்டு முக்கிய ஆட்டம் தான் அவரை இத்தனை உயரத்தில் வைக்க முக்கிய காரணம். அந்த இரண்டு இன்னிங்க்ஸ் பற்றி பார்ப்போம்.

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. தோனி தலைமையில் இளம் இந்திய அணி பாகிஸ்தானை சந்தித்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பதால் அனல் பறந்தது. அப்போதைய இந்திய அணியில் அனுபவம் பெற்ற சில வீரர்களில் கம்பீரும் ஒருவர்.

75 ரன்கள் அடித்த கம்பீர்

75 ரன்கள் அடித்த கம்பீர்

அந்த இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. யூசுப் பதான், உத்தப்பா, யுவராஜ், தோனி என அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், நங்கூரம் போட்டது போல நின்ற கம்பீர் துவக்கம் முதல் 18வது ஓவர் வரை நின்று 54 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் இந்தியா 157 ரன்கள் மட்டுமே அடித்தது. அதில் பாதியை கம்பீர் மட்டுமே அடித்து இருந்தார். அந்த போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி

அடுத்த மறக்க முடியாத இன்னிங்க்ஸ் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. இந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த 274 ரன்கள் குவிக்க, இறுதிப் போட்டியில் இந்தியா சவால் நிறைந்த சேஸிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

97 ரன்கள் அடித்த கம்பீர்

97 ரன்கள் அடித்த கம்பீர்

இந்திய அணியில் துவக்க வீரர்கள் சேவாக் 0, சச்சின் 18 ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. கம்பீர் அப்போது மீண்டும் நங்கூரம் போட்டது போல நின்று, நிதானமாக ஆடினார். கோலி 35 ரன்களில் வெளியேற, தோனியுடன் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்தார். 97 ரன்களில் வெளியேறினார், 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அடுத்து தோனி, யுவராஜ் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர்.

இறுதிப் போட்டிகளில் சூப்பர்

இறுதிப் போட்டிகளில் சூப்பர்

இறுதிப் போட்டிகள் என்றாலே தடுமாறும் வீரர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், கம்பீருக்கு இறுதிப் போட்டிகள் என்றாலே தானாக பொறுப்பு கூடி வந்து விடுகிறதோ என தோன்றும் அளவுக்கு செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் கூட சிறந்த கேப்டனாக செயல்பட்டு இரண்டு ஐபிஎல் கோப்பை பெற்றுத் தந்துள்ளார் கம்பீர். இந்திய கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத ஒரு வீரர், கௌதம் கம்பீர்.

Story first published: Wednesday, December 5, 2018, 12:35 [IST]
Other articles published on Dec 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+