Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC Rules: டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேக்கான விதிகள் மாற்றம்.. இனி இது நடந்தால் பேட்ஸ்மேன்கள் பாவம்

துபாய்: டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே என்பது மிகவும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பவர் பிளே விதி என்பது பவுண்டரி லைனில் வெறும் இரண்டு வீரர்கள் தான் நிற்பார்கள். இந்த பவர் பிளேவில் எந்த அணி விக்கெட்களை பறிகொடுக்காமல் அதிக ரன்கள் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

20 ஓவர் முழுமையாக நடைபெறும் போட்டியில் முதல் ஆறு ஓவர் பவர் பிளே நடைமுறையில் இருக்கும். இந்த நிலையில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பவர் பிளே ஓவர்கள் குறைக்கப்படும். ஆனால் அது சரியான முறையில் குறைக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவியது.

T20 cricket powerplay rules

உதாரணத்திற்கு ஆட்டம் 18 ஓவராக குறைக்கப்பட்டால் பவர் பிளே 5 ஓவராக இருக்கின்றது என்றும் குறைந்தபட்சமாக ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் பவர் பிளே இரண்டு ஓவர்களாக இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இது பந்து வீசும் அணிக்கும், சில் சமயம் பேட்டிங் செய்யும் அணிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்பு வரை பவர்பிளே என்பது ஒரு ஓவர் முழுமையாக இதுவரை கடைபிடித்து வந்தது. ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள விதியில் பவர் பிளே ஒரு ஓவரில் பாதி வரை தான் நடைமுறை ப்படுத்தப்படும் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டால் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும். ஐந்து ஓவரிலிருந்து 19 ஓவர் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால் பவர்பிளே எவ்வளவு ஓவர் வரை இருக்கும் என்பது குறித்து ஐசிசி அறிவித்திருக்கிறது.

அதன்படி ஆட்டம் 5 ஓவர்கள் ஆக குறைக்கப்பட்டால் 1.3 ஓவர் வரை தான் பவர் பிளே அமலில் இருக்கும். இதேபோன்று ஆறு ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டால் 1.5 ஓவர் வரை பவர் பிளே இருக்கும். ஏழு ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டால் 2.1 ஓவர் என்ற அளவில் பவர்பிளே இருக்கும். 8 ஓவராக குறைக்கப்பட்டால் 2.2 என்று அளவிலும், ஆட்டம் ஒன்பது ஓவராக குறைக்கப்பட்டால் 2.4 ஓவர் என்ற அளவில் பவர் பிளேவும், ஆட்டம் 10 ஓவராக குறைக்கப்பட்டால் மூன்று ஓவர் வரை பவர் பிளேவும் அமலில் இருக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இதே போன்று 11 ஓவராக குறைக்கப்பட்டால் 3.2 வரை பவர் பிளேவும், 12 ஓவர் ஆக குறைக்கப்பட்டால் 3.4 ஓவர் வரை பவர் பிளேவும் 13 ஓவர் ஆக குறைக்கப்பட்டால் 3.5 ஓவர் வரை பவர் பிளேவும், 14 ஓவர் ஆக போட்டி குறைக்கப்பட்டால் 4.1 ஓவர் அளவில் பவர் பிளேவும் குறைக்கப்படும். அதேபோன்று 15 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டால் 4.1 ஓவர் வரை பவர் பிளேவும், 16 ஓவராக குறைக்கப்பட்டால் 4.5 பவர் பிளேவும் 17 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டால் 5.1 என்ற அளவில் பவர் பிளேவும் 18 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டால் 5.2 என்ற அளவில் பவர் பிளேவும் 19 ஓவராக குறைக்கப்பட்டால் 5.4 என்று அளவில் பவர் பிளே குறைக்கப்படும். இந்த புதிய விதி வரும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Friday, June 27, 2025, 13:52 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+