T20 WC: சூர்யகுமாருடன் மோதலால் குல்தீப் நீக்கம்? அரசியல் செய்யும் கம்பீர்.. பாகிஸ்தான் வீரர் புகார்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் முக்கியமான போட்டிகளில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியிலும் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுவரை ஆடிய 54 டி20 சர்வதேசப் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையிலும், அதிக விக்கெட்டுகளை இந்திய அணிக்காக குல்தீப் வீழ்த்திருந்தார். இந்த சூழலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்டர் அகமது ஷேசாத், குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் குல்தீப் யாதவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என ஷேசாத் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷேசாத், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய அவர்,"குல்தீப் யாதவ் உங்களுக்கு ஒரு மேட்ச் வின்னர். அவரை எப்படி அணியிலிருந்து வெளியேற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது, சூர்யா அவரைக் கூட தள்ளினார். ஒழுங்கு நடவடிக்கை பிரச்சினை அல்லது சூர்யகுமார் யாதவுடனான வாக்குவாதம் காரணமாகவே குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதாக இப்போது மக்கள் பேசுகிறார்கள்."
"இல்லையெனில், அவர் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார். குல்தீப் யாதவ் களத்தில் வெவ்வேறு பந்துகளை வீசி ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்கிறார்," என்று ஷேசாத் ஆணித்தரமாகக் கூறினார்.கடந்த பிப்ரவரி 15 அன்று ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்த பிறகு, சூர்யகுமார் குல்தீப் யாதவிடம் கோபமாகப் பேசுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
இது குறித்து பேசிய அவர், "நீங்கள் எந்தத் துறைக்குள் நுழைந்தாலும், முழு கவனம் தேவை. கம்பீர் அரசியலில் நுழைந்த பிறகு, இயல்பாகவே அவரது மனநிலை மாறியது. அவர் அரசியலில் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. ஆனால் அதே அரசியலை அவர் அணி சூழலுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகிறது. கௌதம் கம்பீரின் இந்த அரசியல் அனைத்தும் இந்திய அணியின் இமேஜை சேதப்படுத்திவிட்டது," என்று தெரிவித்தார்.
"விராட் கோலி மட்டுமே இந்தியாவின் ஒரே 'சேஸ் மாஸ்டர்'. கம்பீரின் அரசியல் காரணமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய அணி அவ்வளவு மோசமானதல்ல, ஆனால் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு கம்பீர்தான் காரணம்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026-ல், பிப்ரவரி 22 அன்று கொழும்பில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் குல்தீப் யாதவ் களமிறங்கினார்.
அவர் தனது மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நல்ல பார்மில் இருந்தார். ஆனால், அடுத்த நான்கு போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படவில்லை. அகமதாபாத்தில் நடந்த தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த பிறகு, குல்தீப்பை நீக்கியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.இந்நிலையில், 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ், வியாழக்கிழமை சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications