T20 WC: அபிஷேக் சர்மாவை அணியிலிருந்து நீக்க கூடாது..பைனலுக்கு முன் தவறு செய்யாதீங்க-ரவி சாஸ்த்ரி
டி20 உலக கோப்பைப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அபார ஆட்டத்தை முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அதேசமயம், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபிஷேக் ஷர்மாவைத் தொடர்ந்து அணியில் தக்கவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், இரு வீரர்களின் நிலை குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சாம்சனின் கம்பேக் பலருக்கு ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், தமக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். சஞ்சு சாம்சன், களத்தில் மனதளவில் மிகவும் வலிமையான வீரராக மாறியுள்ளார் என்று சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தொடர்ந்து களத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், ஷாட் தேர்வில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, தனது பலத்தை நம்பி விளையாட வேண்டியதையும் இறுதியாக சாம்சன் உணர்ந்துள்ளார்," என்று சாஸ்திரி கூறினார்.

சாம்சனிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன, ஆனால் சில சமயங்களில் அவரது கவனச்சிதறல் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், அவர் இப்போது மனதளவில் மிகவும் பக்குவப்பட்டுள்ளார். அவர் இந்திய அணியில் இடம் பெற்றதிலிருந்து அவரது திறமையையோ அல்லது ஆற்றலையோ யாரும் சந்தேகப்பட்டது இல்லை என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன் வெறும் 31 வயதுதான் ஆகிறது. அவர் ஓர் உண்மையான சாம்பியன். அவரது தற்போதைய ஆட்டத்தைப் பார்க்கும்போது, அதில் தரம், நுணுக்கம், சக்தி மற்றும் துல்லியமான செயல்பாடு ஆகியவை உள்ளதைப் பார்க்கலாம். இந்திய அணியில் அவரது பங்கு இப்போது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதால், அவரது சிறந்த ஆட்டம் இன்னும் வரவில்லை என்றும் சாஸ்திரி கூறினார்.
சாம்சனின் எழுச்சி இந்திய அணியின் தன்னம்பிக்கையை உயர்த்தினாலும், அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கிறது. டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஏழு இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஒரு சவாலாக உள்ளது.
இருப்பினும், இந்திய அணியின் லெவனில் இப்போது மாற்றம் செய்வது மிகவும் தாமதமானது என்று சாஸ்திரி கூறியுள்ளார். "அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், தற்போதுள்ள வீரர்களை மாற்றக் கூடாது. அபிஷேக் தனது திறனையும் பலத்தையும் நம்பி விளையாட வேண்டும், தயக்கம் அல்லது பயத்துடன் ஒதுங்கி விடாதீர்கள்" என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications