Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: சஞ்சு சாம்சன் 150 ரன்கள் கூட அடித்திருப்பார்.. கொஞ்சம் கூட சுயநலமே இல்லை- பாலாஜி பாராட்டு

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் கொஞ்சும் கூட சுயநலம் இன்றி விளையாடியதாக முன்னாள் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி பாராட்டினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கட்டாய வெற்றியில் 97* ரன்கள் குவித்து, மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய சாம்சன், மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து 42 பந்துகளில் அசத்தலாக 89 ரன்கள் எடுத்தார்.

சதம் அடிப்பதற்கு வெறும் 11 ரன்கள் குறைவாக இருந்தபோதும், சாம்சன் தன்னலம் இன்றி ஒரு பெரிய ஷாட் ஆடி, 14வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இது அணி நலன் சார்ந்த அணுகுமுறை என பாலாஜி குறிப்பிட்டார். அதற்குள்ளாகவே அவர் இங்கிலாந்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார். இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பிரமாண்டமான 253 ரன்களைக் குவித்தது.

{image-T20 WC-06-2026-000299b-jpg-1772877575306_1772877576846-600x338.jpg tamil.mykhel.com}

பத்ரிநாத்தின் யூடியூப் சேனலில் சாம்சனின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பாலாஜி, "ஒரு சேஸிங்கின் முடிவில் ஆட்டமிழக்காமல் நின்றது அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கும். ஒருபுறம் அபிஷேக் ஷர்மா ரன்கள் எடுக்கத் திணறும்போது, இன்னொருபுறம் அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது இரு ஆட்டங்களும் அபாரமான பக்குவத்தைக் காட்டின. இவை பொதுவாக ஒரு மூத்த வீரரிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படும் ஆட்டங்கள்."

"இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டம் தன்னலமற்றது. 13வது ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார். இல்லையென்றால், 150 ரன்கள் கூட அடித்திருப்பார். இந்தப் பிச்சுக்கு எந்த ஸ்கோரும் பாதுகாப்பானது அல்ல என்பதை சாம்சன் அறிந்திருந்தார். அதனால் பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கினார். டாப் ஆர்டரில் அவரது தொடர்ச்சியான ஃபார்ம் மிக முக்கியமானது. முன்னணி பேட்ஸ்மேன் ஸ்கோர் செய்யும்போது, மற்றவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதல் கிடைக்கும்."

"கடைசி இரண்டு போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாகச் செயல்பட்டதற்கு சஞ்சு சாம்சனின் சிறப்பான அணுகுமுறையும், அதிரடி பேட்டிங்கும்தான் முக்கியக் காரணம்" என்றும் பாலாஜி குறிப்பிட்டார். இறுதியில், இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து, வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், இந்தியாவின் 253 ரன்கள் இலக்கு தேவைப்பட்டது.

சாம்சனின் கம்பேக் குறித்து பாராட்டிய பத்ரிநாத், "அவருக்கு நிலைமை எவ்வாறு மாறியது! அணியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அடுத்தடுத்து 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருதுகள் வரை வாங்கியுள்ளார். . மைல்கற்களைப் பற்றி கவலைப்படாமல், சஞ்சு தனது இன்னிங்ஸ் முழுவதும் அதிரடியாக விளையாடியதுதான் இந்தப் போட்டியின் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவரது முக்கிய பார்ட்னர்ஷிப்கள் குறித்து யாரும் கவனிக்கவில்ரல.ஆனால், அவைதான் இன்னிங்ஸுக்கு பெரும் உத்வேகம் அளித்தன."தொடர்ந்து இரண்டாவது முறையாக 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருதை வென்றதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்த அற்புதமான சாதனையை நிகழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்.

Story first published: Saturday, March 7, 2026, 15:36 [IST]
Other articles published on Mar 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+