Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: பாகிஸ்தானை விட கீழே இருக்கிறோம்.. அரையிறுதிக்கு முன் இந்த தவறை இந்தியா சரி செய்யனும்

மும்பை: டி20 உலக கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை, எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இந்திய அணி கேட்ச் மிஸ் செய்வதாக ஒரு பெரிய கவலை அளிக்கும் விஷயம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், முன்னணி கிரிக்கெட் அணிகளில் கேட்ச் பிடிக்கும் திறனில் இந்தியா கடைசிக்கு ஒரு இடம் மேல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகளை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சில கேட்ச்களைத் தவறவிட்ட போதிலும், மேற்கிந்தியத் தீவுகளை 195/4 என்ற ஸ்கோருடன் கட்டுப்படுத்தி, நான்கு பந்துகள் மீதமிருக்க இலக்கை வெற்றிகரமாக எட்டியது.

{image-T20 WC-01-2026-000706b-jpg-1772477286437_1772477287400-600x338.jpg tamil.mykhel.com}

'ஆகாஷ் சோப்ரா' என்ற தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு வீடியோவில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கேட்ச்களை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து பேசிய அவர், "இந்திய அணி ஒன்றை சரிசெய்ய வேண்டும், அதுதான் நமது கேட்ச் பிடிக்கும் திறன். நாம் என்ன கேட்ச்களைப் பிடிக்கிறோம்? நாம் 13 கேட்ச்களைக் கைவிட்டுள்ளோம். கேட்ச் பிடிக்கும் திறனில் நாம் கீழே இருந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்.

"மற்ற அணிகள் எல்லாம் நம்மை விட முன்னணியில் உள்ளன. ஜேசன் ஹோல்டர் கேட்ச் தவறவிட்ட மேற்கிந்தியத் தீவுகள் கூட நம்மை விட முன்னணியில் உள்ளன. பாகிஸ்தான் கூட நம்மை விட முன்னணியில் உள்ளது. ஆஸ்திரேலியா மட்டுமே நமக்கு பின்னால் உள்ளது. நாம் முதல் 10 இடங்களில் உள்ள அணிகளைப் பற்றிப் பேசுகிறோம்" எனப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டதைச் சுட்டிக்காட்டிய சோப்ரா, இந்திய அணி சமீபகாலமாக பல கேட்ச்களைத் தவறவிட்டு வருவதாகக் கவலை தெரிவித்தார். "இந்தியா மிகவும் மோசமாக செயல்பட்டுள்ளது. இதுவரை அது பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை. அபிஷேக் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். ஆசியக் கோப்பையில் 12 கேட்ச்களை தவறவிட்டோம், இங்கே ஏற்கெனவே 13 கேட்ச்களை தவறவிட்டுள்ளோம்" என்று அவர் விளக்கினார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவின் பந்தில் ரோஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். அவர், 14 ரன்களில் இருந்தபோது அபிஷேக் ஷர்மா கேட்ச் தவறவிட்டார். அதேபோல் அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ரோவ்மேன் பவல் 19 பந்துகளில் 34* ரன்கள் எடுத்திருந்தார். அவர் 27 ரன்களில் இருந்தபோது மற்றொரு கேட்சையும் தவறவிட்டார்.

அக்சர் படேலின் பந்தில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஒரு ரன் எடுத்திருந்தபோது திலக் வர்மா ஒரு கடினமான கேட்சைத் தவறவிட்டார், அந்த பந்து சிக்ஸராகவும் மாறியது. "நாம் இப்படி கேட்ச்களைத் தவறவிட்டுக் கொண்டே இருந்தால், ஒரு நாள் அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். இதுவரை அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அதனால் நாம் அதை மறந்துவிட்டு, நமக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் இது ஒரு பொருட்டல்ல என்று கூறலாம்.

நமக்கு மிகச் சிறந்த அணி உள்ளது, ஆனால் ஏதேனும் பலவீனம் இருந்தால், அதைச் சரிசெய்ய வேண்டும். நாம் கேட்ச்களைப் பிடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதியில் அபிஷேக் ஷர்மா மீண்டும் ரன் குவிக்கும் பாதைக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டு அதே மைதானத்தில், அதே எதிரணிக்கு எதிராக இடது கை தொடக்க வீரரான அபிஷேக் ஒரு அதிரடி சதத்தை அடித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

"வான்கடே ஸ்டேடியத்தில் அபிஷேக் ஷர்மா தன் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு அவர் அடித்த 135 ரன்கள் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றியது. மும்பை சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறது. அபிஷேக் ஷர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதும், நாம் அனைத்து கேட்ச்-களையும் பிடிப்பதும் மிக முக்கியம்" என்று சோப்ரா குறிப்பிட்டார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 லீக் ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், 2025 பிப்ரவரியில் வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியில், இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார்.

Story first published: Tuesday, March 3, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+