Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: இந்திய அணி கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.. ஆஸ்திரேலிய ஜாம்பவான் கருத்து

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கடும் நெருக்கடிகளை சந்தித்தாலும், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்த போதிலும், கிளார்க் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை துரத்தி வெறும் 111 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இந்த மோசமான செயல்பாடு, காரணமாக பலத்தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய கிளார்க், "தென்னாப்பிரிக்கா தங்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில், வலுவான அணியான இந்தியாவை வீழ்த்தியது. ஆஹா! இது அவர்களுக்கு ஒரு பெரிய போட்டியும், ஒரு பிரம்மாண்டமான வெற்றியும் ஆகும். இப்போது இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது, அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்," என்றார்.

"என்னைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் உலகிலேயே சிறந்த டி20 அணிதான். நன்கு தெரிந்த நிலைகளில் அவர்கள் விளையாடுகிறார்கள். எனவே, அவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்வார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு, சூழ்நிலைகள் இப்போது மாறியுள்ளன," என்று கிளார்க் குறிப்பிட்டார்.

"ஜிம்பாப்வேயை மதிக்காமல் பேசவில்லை. சூப்பர் 8 சுற்றுக்கு அவர்கள் தகுதியானவர்கள்தான். ஆனால், அவர்களை இந்தியா எளிதில் வெல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கப்போவது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானதுதான். வெஸ்ட் இண்டீஸ் தற்போது மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தைரியமாக விளையாடுகிறார்கள். அவர்களிடம் ஒரு அற்புதமான அணி உள்ளது, மேலும் அவர்கள் தங்களை முழுமையாக நம்புகிறார்கள்," என்று கிளார்க் விளக்கினார்.

"அந்தப் போட்டிதான் குழுவில் இருந்து இரண்டாவது அணி எது அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றார். இந்த ஆட்டத்தின் வெற்றியாளர், சூப்பர் 8 குரூப் 1 இலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக மாறுவார் என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.

"இந்தியா தகுதி பெறவில்லை என்றால், நீங்கள் ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராக இருந்தால், கடும் கோபமடைவீர்கள், ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் தற்போது உலகின் சிறந்த அணி, மேலும் தங்களுக்கு நன்கு தெரிந்த நிலைகளில் விளையாடுகிறார்கள். இந்தியா தகுதி பெறவில்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்" என்றும் கிளார்க் தெரிவித்தார்.

Story first published: Wednesday, February 25, 2026, 7:15 [IST]
Other articles published on Feb 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+