Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவுக்கு நேர்ந்த கதி.. டாப் அணிகளை காலி செய்த பாகிஸ்தான்

நியூயார்க் : 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வென்ற பின் 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. சாம்பியன் அணியாக களம் கண்ட இந்திய அணியுடன் சேர்த்து இந்த தொடரில் நான்கு அணிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்பட்டன.

2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி மீது முந்தைய வெற்றியால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. குரூப் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வலுவான அணிகள் என்ற அடிப்படையில் எதிர்பார்ப்பை பெற்றன. முந்தைய உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி அனுபவம் வாய்ந்த அணி என்ற அடிப்படையில் கவனிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி, பாகிஸ்தான் அணி தான் இறுதியில் கோப்பையை வென்றது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

குரூப் சுற்றுகளில் இந்திய அணி அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், அங்கு தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோல்வி அடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இலங்கை அணி தனது குரூப் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி தனது குரூப் சுற்றில் இரண்டு போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்று சூப்பர் 8 சுற்றுக்கு நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னேறியது.


சூப்பர் 8 சுற்றில் குரூப் "ஈ" பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. குரூப் "எஃப்" பிரிவில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.

இதில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இந்த இரண்டு அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் ஒரு போட்டியிலும், சூப்பர் ஹிட் சுற்றில் ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்திருந்ததால், அதன் மீதான எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது.

அரை இறுதியில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

Story first published: Friday, May 31, 2024, 16:12 [IST]
Other articles published on May 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+