Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னத்த இந்தியா.. என்னத்த ஜெயிச்சி.. கடுப்பேற்றிய கவாஸ்கர் கமெண்டரியால் அமிதாப், டோணி கடும் கோபம்

பெங்களூர்: இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-10 சுற்று ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. உயிரை கொடுத்து ஆடி கடைசி நேரத்தில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தனர் இந்திய வீரர்கள்.

இப்படி ஒருபக்கம் இந்திய வீரர்கள் ஆட, இந்திய ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து இறைவனை வேண்டிக்கொண்டிருந்த நிலையில், டிவியில் நேரடி வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கரோ கடுப்பை கிளப்பியபடி இருந்தார்.

புட்டுக்கும்

புட்டுக்கும்

இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஏதாவது ஒரு பார்ட்னர்ஷிப் உருவாகினால் போதும், 'இப்போது ஒரு விக்கெட் போனால் போதும். வங்கதேசம் எளிதில் வெற்றியை ருசித்துவிடும்' என்று வர்ணனையின்போது வாயடித்தார் கவாஸ்கர்.

நட்டுக்கும்

நட்டுக்கும்

இதேபோலத்தான், வங்கதேசம் பேட்டிங் செய்தபோது, 'இந்த ஓவரில் ஒரு பவுண்டரி போனாலும், இந்திய வீரர்கள் நிலை குலைந்துவிடுவார்கள்', 'வங்கதேசம் இப்போதுள்ள நிலையை பார்த்தால் இனிமேல் இந்தியா வெற்றி பெற முடியாது' இப்படியெல்லாம் கமெண்ட் அடித்தார்.

முடியலடா சாமி

முடியலடா சாமி

சிறுநீர் கழிக்க எழுந்து சென்றாலே இந்தியா தோற்றுவிடும் என்று நம்பிக்கொண்டு, டிவி முன்னாடி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் சென்டிமென்ட் செம்மல்களான நம்மவர்களுக்கு, கவாஸ்கரின் இந்த அபசகுண வார்த்தைகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல இருந்தது.

வாய் வைத்த கவாஸ்கர்

வாய் வைத்த கவாஸ்கர்

இதில் கொடுமை என்னவென்றால், தெரிந்தோ தெரியாமலோ, கவாஸ்கர் 'வாய் வைக்கும்போதெல்லாம்' அவர் சொன்னபடியே வேறு நடந்து தொலைத்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் அப்போதே கவாஸ்கரை ரன்னிங் கமெண்டரியில் வறுக்க ஆரம்பித்தனர்.

அந்த நாடா சோறுபோடுது?

ஒருவழியாக இந்தியா வெற்றி பெற்ற நிலையில், தனது கோபத்தை நடிகர் அமிதாபச்சன், டிவிட்டரில் காட்டியுள்ளார். தனது டிவிட்டில், "இந்திய வர்ணனையாளர்கள், பிற வீரர்களை பற்றியே எப்போதும் பேசாமல், நமது வீரர்கள் குறித்து அதிகப்படியாக பேசுவது உதவியாக இருக்கும். இதை மரியாதையோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சாடியுள்ளார்.

ஐயா சொன்னா சரிதான்

இதனிடையே, எப்போதும் அமைதியாக இருக்கும் கேப்டன் டோணியும் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சனின் டிவிட்டிற்கு தனது டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து பதிலளித்துள்ளார் டோணி. அதில், "இதில் நான் கூடுதலாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று ஒற்றை வரியில் தெரிவித்துள்ளார். அமிதாப் சொன்னதில் தனக்கு முழு சம்மதம் என்பதைத்தான் டோணி இப்படி கூறியுள்ளார்.

ரசிகர்கள் புத்திசாலிகள்

ரசிகர்கள் புத்திசாலிகள்

நேற்றைய போட்டியின்போது, கவாஸ்கர் தவிர்த்து, லட்சுமணன், வீரேந்திர சேவாக், சஞ்சய் மஞ்சரேக்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் வர்ணனை செய்தனர். இருப்பினும் அமிதாப்பும், டோணியும் கடுப்பான அந்த இந்திய வர்ணனையாளர் கவாஸ்கர்தான் என்பதை ரசிகர்களே புரிந்து கொண்டனர்.

காசு வேணும்னாலும் தர்றோம்

கவாஸ்கர் கமெண்டரி பேசியபோது வெளியான ஒரு டிவிட் இது. அவருக்கு சம்பளம் கொடுத்தாவது சும்மா இருக்க சொல்லலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.

மியூட் ரிமோட்

கவாஸ்கர் பேசுவதை மட்டும் மியூட் செய்யும் ரிமோட் கன்ட்ரோல் எங்காவது கிடைக்குமா என்று கேட்டு கோபத்தை வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.

Story first published: Friday, March 25, 2016, 18:25 [IST]
Other articles published on Mar 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+