Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமேலும் நீங்க "அப்ரண்டிஸ்கள்" இல்லை.. ஆப்கான் வீரர்களுக்கு இன்சமாம் "ஷொட்டு"!

கொல்கத்தா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார். இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உறுதியுடன் ஆடிய விதம் பாராட்டுக்குரியது என்று இன்சமாம் கூறியுள்ளார். இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றிருக்க வேண்டியது. ஆனால் துரதிர்ஷ்டசவமாக தோற்றுப் போய் விட்டது.

தோல்வியுற்றாலும் கூட ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடிய விதம், போராடிய தைரியம் அனைவரையும் அசத்தி விட்டது

அசத்தல் ஸ்கோர்

அசத்தல் ஸ்கோர்

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைக் குவித்தது. கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் அபாரமாக ஆடி 62 ரன்களைக் குவித்தார்.

தில்லாக ஆடிய தில்ஷன்

தில்லாக ஆடிய தில்ஷன்

ஆனால் பின்னர் ஆடிய இலங்கை அணியில் திலகரத்னே தில்ஷன் ஆப்கானிஸ்தானின் ஆசையில் மண்ணைப் போட்டு விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 56 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அனுபவம் இல்லை.. ஆனாலும் அசத்தினோம்

அனுபவம் இல்லை.. ஆனாலும் அசத்தினோம்

போட்டி முடிவில் பயிற்சியாளர் இன்சமாம் உல் ஹக் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது வீரர்களிடம் அனுபம் இல்லை. உலக சாம்பியனை எதிர்த்து ஆடுவது என்பது சாதாரணமானதல்ல. ஆனாலும் வீரர்கள் அசத்தி விட்டனர்.

கடும் போட்டியைக் கொடுத்தோம்

கடும் போட்டியைக் கொடுத்தோம்

இலங்கை அணிக்கு எளிதான சேஸிங்கை நாங்கள் தரவில்லை. மாறாக கடுமையான போட்டியைக் கொடுத்தோம். இலங்கை அணி அனுபவம் வாய்ந்தது. நடப்பு சாம்பியனும் கூட. எனவே நெருக்கடியை சிறப்பாக அவர்கள் கையாண்டனர்.

கேப்டன் சூப்பர்

கேப்டன் சூப்பர்

கேப்டன் அஸ்கர் சிறப்பாக ஆடினார். 33 பந்துகளில் 61 ரன்களை அவர் குவித்த விதம் பாராட்டுக்குரியது. அதேபோல சமியுல்லா ஷென்வாரி 31 ரன்களைக் குவித்தது முக்கியமானது.

விட்டுக்கொடுக்காமல் ஆடினர்

விட்டுக்கொடுக்காமல் ஆடினர்

எங்களது வீரர்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. நிறைய போரடினார்கள். இது பாராட்டுக்குரியது. வெல்ல முடியாது என்று தெரிந்தாலும் கூட போராட வேண்டும். அதை விட்டு விடக் கூடாது. அதை ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செய்தனர்.

அனுபவம் கிடைத்தால் நல்லது

அனுபவம் கிடைத்தால் நல்லது

இன்னும் அனுபவம் கூடக் கூட ஆப்கானிஸ்தான் வீரர்கள் மேலும் ஜொலிப்பார்கள். சிறப்பாக பேட் செய்தனர், சிறப்பாக பந்து வீசினர். பீல்டிங்கில் இன்னும் தேற வேண்டியுள்ளது என்றார் இன்சமாம்.

ஹலோ.. நான் ஆப்கானிஸ்தான் கோச் பாஸ்!

ஹலோ.. நான் ஆப்கானிஸ்தான் கோச் பாஸ்!

சரி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்விக்கு சிரித்தபடி, நான் இப்ப ஆப்கானிஸ்தான் கோச் என்று கூறி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார் இன்ஸி!

Story first published: Friday, March 18, 2016, 17:16 [IST]
Other articles published on Mar 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+