For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச.. 26ம் தேதி தோல்விக்கு, 27ம் தேதி பழி வாங்கிய இந்தியா!

By Veera Kumar

மொகாலி: கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையின்போது, மார்ச் 26ம் தேதி நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, உலக கோப்பையில் இருந்து நம்மை வெளியேற்றியது.

மார்ச் 26ம் தேதி நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு, 2016 மார்ச் 27ம் தேதியான நேற்று இந்தியா பழிக்கு பழி வாங்கி, டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றியுள்ளது.

ஆம்.. எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல், அரையிறுதி முன்னேறிய இந்திய அணியை, ஆஸ்திரேலியா தோற்கடித்து வெளியேற்றியது.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவை வென்று, பைனலுக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்த நியூசிலாந்தை சந்தித்தது. இப்போட்டியில் எளிதில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது.

கண் கலங்கிய டோணி

கண் கலங்கிய டோணி

பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி, தோல்வியே காணாமல் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோது, கூல் கேப்டன் டோணியின் கண்களில் கூட கண்ணீர் ததும்பியது. அந்த போட்டோ அப்போது வைரலானது.

காலிறுதி

காலிறுதி

இந்நிலையில், நேற்று மொகாலியில் டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதின. இதனால் இப்போட்டி செல்லமாக காலிறுதி நாக்-அவுட் என்று அழைக்கப்பட்டது. எந்த அணி வெற்றி பெறுமோ அதுதான் அரையிறுதி செல்ல முடியும் என்ற நிலையில் இப்போட்டி நடந்தது.

ஆஸி. அவுட்

ஆஸி. அவுட்

ஆஸ்திரேலியா குவித்த 160 ரன்களை விராட் கோஹ்லியின் அசத்தல் பேட்டிங் துணையோடு 19.1 ஓவரிலேயே துரத்தி பிடித்தது இந்தியா. எனவே, ஆஸ்திரேலியா, உலக கோப்பையை விட்டே வெளியேற்றப்பட்டது.

தொடரும் தோல்வி

தொடரும் தோல்வி

2007 முதல் நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை ஒன்றை கூட ஆஸ்திரேலியா வென்றதில்லை. இம்முறை எப்படியாவது வென்றுவிடலாம் என ஸ்மித் தலைமையில் களமிறங்கிய அந்த அணியை பின்னந்தலையிலேயே போட்டு, வெளியே அனுப்பியுள்ளது இந்தியா.

பழி தீர்த்தது இந்தியா

பழி தீர்த்தது இந்தியா

இதன் மூலம், கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி நடந்த 50 ஓவர் உலக கோப்பை தோல்விக்கு, இவ்வாண்டு மார்ச் 27ம் தேதி உலக டி20 போட்டித்தொடரில் பழி தீர்த்துள்ளது இந்தியா. இனிமேல் இந்தியாவுக்கு எஞ்சியுள்ளது இரு போட்டிகள்தான். இரண்டிலும் வென்றால் கோப்பை நமக்கே.

ஏற்கனவே அசத்தல்

ஏற்கனவே அசத்தல்

2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் காலிறுதியில், இப்படித்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்த இந்தியா, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கிரீஸ் டப்பா கதை

கிரீஸ் டப்பா கதை

ஒரு திரைப்படத்தில் கிணற்றுக்குள் மெக்கானிக் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கவுண்டமணி மீது கிரீஸ் டப்பாவை வீசிவிடுவார் செந்தில். முகத்தில் கிரீஸ் அப்பிய நிலையில் மேலே வரும் கவுண்டமணி, கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்சே என கேட்டு, செந்திலை கிணற்றுக்குள் உதைத்து தள்ளுவார். தமிழக ரசிகர்களுக்கும் இப்போது இந்த சீன்தான் ஞாபகத்துக்கு வருகிறதாம்.

Story first published: Tuesday, March 29, 2016, 15:01 [IST]
Other articles published on Mar 29, 2016
English summary
India took revenge on Australia in the world cup cricket as they pull Australia out from the t20 world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+