Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொஹாலியில் மிரட்டிய ஆஸ்திரேலியாவைக் காலி செய்த கோஹ்லி!

மொஹாலி: மொஹாலி மைதானம் மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவுமே நேற்று ஆர்ப்பரித்துக் கொண்டாடித் தீர்த்து விட்டது. கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட நேற்று இரவு கோஹ்லியின் ஆட்டத்தைக் காண உட்கார்ந்திருந்ததைக் காண முடிந்தது. அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் கொஞ்சம் கூட டென்ஷனே இல்லாமல் அட்டகாசமாக ஆடி இந்தியாவை அரை இறுதிக்குக் கொண்டு போய் விட்டார் கோஹ்லி.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய கோஹ்லி, கடைசிக் கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து ஆஸ்திரேலியாவை நையப்புடைத்து விட்டார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் வாட்சன், பால்க்னர் என எல்லோருடைய முகங்களும் அப்படியே செத்துப் போய் விட்டன கோஹ்லி ஆட்டத்தைப் பார்த்து.

பால்க்னரின் ஓவரில் கோஹ்லி அடுத்தடுத்து பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசி தனது திருவிழாவை ஆரம்பித்தபோதே ஆட்டத்தின் முடிவை ஆஸ்திரேலிய வீரர்கள் உணர்ந்து விட்டனர். இந்திய அணியில் இனி கோஹ்லி ராஜ்ஜியம்தான் என்பதை கட்டியம் கூறும் வகையில் நேற்றைய அவரது அதிரடி ஆட்டம் அமைந்தது.

பிரமாதமான துரத்தல்

பிரமாதமான துரத்தல்

கோஹ்லியின் ஆட்டம் அவர் சந்தித்த முதல் பந்திலிருந்தே அபாரமாக இருந்தது. கடைசி வரை விடாமல் அவர் விரட்டிய விதம், கொஞ்சம் கூட சோர்வைக் காட்டாத முகம், துறுதுறுவென ரன் எடுக்க ஓடிய ஆவேசம், ஒவ்வொரு பந்தையும் வீணடிக்கக் கூடாது என்ற வேகம்.. அப்பப்பா.. கோஹ்லியை இதுவரை ரசிக்காதவரக்ளுக்கு நேற்று அவரது ஆட்டம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.

200 ரன்களுக்குச் சமம்

200 ரன்களுக்குச் சமம்

நேற்று அவர் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 ரன்களும் அட்டகாசமாகவை திரட்டப்பட்டவை. 200 ரன்களுக்குச் சமமானவை. அப்படி ஒரு உழைப்பை நேற்றுக் கொடுத்தார் கோஹ்லி. ஒவ்வொரு ரன்னுக்காகவும் அவர் மெனக்கெட்ட விதம் மிரட்டி விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு கோஹ்லியின் ஆட்டம் மிகப் பெரிய ஷாக்.

பெஸ்ட் 3

பெஸ்ட் 3

போட்டிக்குப் பின்னர் கோஹ்லி கூறுகையில் இது மொத்த அணியின் ஒட்டுமொத்த முயற்சிக்குக் கிடைத்த பலன். எனக்கு மட்டும் இது சொந்தமானதல்ல. எனது சிறந்த 3 ஆட்டங்களில் இதற்கும் ஒரு இடமுண்டு என்றார்.

மொஹாலி கூட்டத்திற்கு ஜே ஜே!

மொஹாலி கூட்டத்திற்கு ஜே ஜே!

மேலும் கோஹ்லி கூறுகையில், மொஹாலி ரசிகர்களின் ஆதரவும் எனது ஆட்டத்திற்கு ஒரு காரணம். அவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் கோஹ்லி.

மொஹாலியா.. கோஹ்லியா

மொஹாலியா.. கோஹ்லியா

இந்தியாவின் சேஸிங்கின்போது 18வது ஓவர் வரை அமைதியான கடல் போலத்தான் இந்திய அணியின் ஆட்டம் இருந்தது. ஆனால் பால்க்னர் வீசிய 18வது ஓவரின்போது அடுத்தடுத்து பவுண்டரிகளை வீசி கோஹ்லி தனது ருத்ரதாண்டவத்தைத் தொடங்கினார். அந்த ஓவரில் அவர் 14 ரன்களைக் குவித்தார். அதன் பிறகு அவரது ஆட்டம் அதிரடியை விட்டு விலகவே இல்லை.

சிக்கலிலிருந்து ஜில் ஜில் முடிவு

சிக்கலிலிருந்து ஜில் ஜில் முடிவு

ஆரம்பத்தில் இந்தியாவின் சேஸிங் தட்டுத் தடுமாறியது. ரோஹித் சர்மா விளையாடவே முடியாமல் தடுமாறி அவுட்டானார். ஷிகர் தவான் அடித்து ஆட முயன்று அவுட்டானார். யுவராஜ் சிங் காலில் சுளுக்குப் பிடித்துக் கொண்டு நிதானம் காட்டினார். ஆனாலும் போராடினார். சுரேஷ் ரெய்னா ஏமாற்றினார். இந்த நிலையில் டோணியும், கோஹ்லியும் இணைந்து ஆஸ்திரேலியாவின் கதையை முடித்தனர்.

தல - தளபதி

தல - தளபதி

மிக மிக பொறுப்புடன் கோஹ்லியும், டோணியும் ஆடியதைப் பார்த்து ரசிகர்கள் குதூகலமடைந்தனர். தலயும், தளபதியுமாக இருவரும் இணைந்து அழகாக சேஸிங்கை முடித்தனர்.

பனிஷிங் கோஹ்லி.. பினிஷிங் டோணி

பனிஷிங் கோஹ்லி.. பினிஷிங் டோணி

வழக்கமாக போட்டியை டோணிதான் சிறப்பாக முடிப்பார் என்பது இந்திய அணியின் "பாரம்பரியம்". ஆம் அந்தப் பாரம்பரியம் நேற்றும் தொட்டுத் தொடர்ந்தது. கோஹ்லி சாத்து சாத்து என்று ஆஸ்திரேலியாவை சாத்தி கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தை டோணி சந்தித்தார். வந்த பந்தை ஒரே சாத்தாக சாத்தி பவுண்டரிக்கு அனுப்பி போட்டியை சிறப்பாக முடித்தார் டோணி.

Story first published: Monday, March 28, 2016, 11:54 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+