Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி டீ இன்னும் வரல.. ஓவரா ஆட்டம் போட்ட வங்கதேச வீரர்களுக்கு ரெய்னா குட்டு!

பெங்களூர்: கடைசிவரை போராட்டத்தை விடவும் கூடாது.. முன்கூட்டியே வெற்றி பெற்றுவிட்டதாக கொண்டாடவும் கூடாது என்று கூறியுள்ளதன் மூலம், வங்கதேச வீரர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு குட்டு வைத்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா..

இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

டாசில் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி ஓவர் திரில்

கடைசி ஓவர் திரில்

இரண்டாவது பேட் செய்த வங்கதேச அணி 19வது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரில், 11 ரன்கள் எடுத்தால் போதும், வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது.

வங்கதேச வீரர்கள் வெறி

அந்த ஓவரின் 3வது பந்தை பாண்ட்யா வீச, அதை ரஹிம் லெக் சைடில் திருப்ப, டோணி எவ்வளவோ டைவ் அடித்து பார்த்தும் தடுக்க முடியாமல் அந்த பந்தும் பவுண்டரிக்கு விரைந்தது. இந்திய ரசிகர்களின் ஹார்ட் ஒரு நிமிடம் நின்று போனது. களத்தில் நின்ற வங்கதேச வீரர்கள் இருவரும், கைகளை காற்றில் குத்தியபடி இந்திய வீரர்களை நோக்கி ஏளனமாக சிரித்தனர்.

எளிய இலக்கு

எளிய இலக்கு

முதல் மூன்று பந்துகளில் 9 ரன்களை சேர்த்தது வங்கதேசம். ஆட்டத்தின் கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் போதும், வெற்றி வங்கதேசத்துக்கு என்ற நிலை ஏற்பட்டது. ஒரு ரன் எடுத்தாலும் போதும், ஆட்டம் டிராவாகிவிடும்.

அடுத்தடுத்து கேட்ச்

அடுத்தடுத்து கேட்ச்

4வது பந்தை ரஹீம் லெக் சைடில் இழுத்து சுற்ற, எல்லை கோடு அருகே நின்ற தவான் கையில் அருமையாக சென்று சேர்ந்தது அந்த பந்து. எனவே, எஞ்சிய 2 பந்துகளுக்கு 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில், மஹ்மதுல்லா சிக்சர் அடிக்கும் வெறியில் பந்தை தூக்கி அடித்தார். அதை ரவீந்திர ஜடேஜா கேட்சாக மாற்றினார்.

பேட்டில் படவில்லை

பேட்டில் படவில்லை

கடைசி பந்தை சுவகடா சந்தித்தார். 2 ரன்கள் எடுத்தால் வெற்றியும், 1 ரன் அடித்தால் டிராவும் ஆகும் நிலை இருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தை பாண்ட்யா ஆப் சைட் திசையில் பிட்ச் செய்து, சற்று வைடாக வீச, சுவகடா அதை எகிறி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல், கிளவுசை கழற்றி வைத்து ரெடியாக நின்ற, விக்கெட் கீப்பர் டோணியிடம் சென்றது.

டோணியின் மின்னல் வேகம்

டோணியின் மின்னல் வேகம்

ஒரு ரன் ஓடிவிட்டால் போட்டி டிராவாகிவிடும் என்பதால், எதிர்முனையில் நின்ற முஸ்தபிசுர் அதிவேகமாக ஓட ஆரம்பித்தார். இதையடுத்து சுவகடாவும், பவுலர் என்ட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் டோணியோ, பந்தை ஸ்டெம்பை நோக்கி எரிந்தால் கூட படாமல் செல்ல வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பந்தை கையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து ஸ்டம்பை பதம் பார்த்தார். இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கூட 2 பவுண்டரிகள் அடித்த வெறியில் இந்திய வீரர்களை நோக்கி ஏளனமாக சிரித்து, வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் தோற்றதில் இந்திய ரசிகர்களுக்கு குஷியோ குஷி.

மீம்ஸ்சா போட்டீங்க, மீம்ஸ்

மீம்ஸ்சா போட்டீங்க, மீம்ஸ்

ஆசிய கோப்பையின்போது டோணி தலையை வங்கதேச பவுலர் வெட்டி கையில் வைத்திருப்பதை போன்ற மீம்சை வங்கதேச ரசிகர்கள் உருவாக்கியிருந்தனர். அதற்கு முன்பாக ஒரு கிரிக்கெட் தொடரின்போது, இந்திய வீரர்கள் தலையை பாதி மொட்டையடித்தது போன்ற மீம்ஸ் உருவாக்கினர்.

ரெய்னாவின் குட்டு

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு சுரேஷ் ரெய்னா ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: போட்டி முடியும்வரை போராட்டத்தை விடவும் கூடாது, வெற்றி பெறுவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபடவும் கூடாது. வாட் ஏ கேம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தேவையா பங்களாதேஷிஷ்

இது தேவையா பங்களாதேஷிஷ்

தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், இந்திய அணி கடைசிவரை போராடியதைத்தான் போராட்டத்தை கைவிட கூடாது என்ற வரியில் விளக்கியுள்ள ரெய்னா, வங்கதேச வீரர்களின் வெறியாட்டத்தை இரண்டாவது வரியில் நறுக்கென்ற வாக்கியத்தால் கண்டித்துள்ளார். யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துனீங்க வங்கதசேம்?

Story first published: Thursday, March 24, 2016, 12:43 [IST]
Other articles published on Mar 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+