Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியிடம் ஒரு "சிவாஜி".. ஒரு சில "கமலஹாசன்"களைப் பார்க்கிறேன்... வாவ் வாவ்.. வாக்!

டெல்லி: விராட் கோஹ்லி ஆட்டத்தில், சச்சின் டெண்டுல்கர் சாயலை பார்க்கிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவி சேனல் ஒன்றுக்கு ஸ்டீவ் வாக் கூறியதாவது: விராட் கோஹ்லி எப்போது களத்தி்ல் இறங்கினாலும் சச்சின் டெண்டுல்கரை அவரிடம் பார்க்க முடிகிறது.

தற்போதைய நிலையில், உலக டி20 பேட்ஸ்மேன்களில் பெஸ்ட் என்றால் அது விராட் கோஹ்லிதான். அவரது சராசரி ரன் குவிப்பு 50க்கு மேல் உள்ளது. ஸ்டிரைக் ரேட்டும் அபாரம்.

கோஹ்லி ரன் அடிக்கனும்

கோஹ்லி ரன் அடிக்கனும்

இந்தியா இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால், விராட் கோஹ்லி அதிக ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். கோஹ்லிதான் இந்தியாவுக்காக தொடர்ந்து சீராக ஆடும் வீரராகும்.

ஆஸ்திரேலியர்கள் போல

ஆஸ்திரேலியர்கள் போல

மைதானத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதை பார்க்கும்போது, பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்களிடம் இருந்த சுபாவம் நினைவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் கோஹ்லி எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கூலாக இருக்க வேண்டும்

கூலாக இருக்க வேண்டும்

ஆக்ரோஷமான ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக ஆடுவதற்கு கோஹ்லி எப்போதுமே முயற்சி செய்பவர். ஆனால், நெருக்கடியான தருணங்களில் தன்னை கூலாக வைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுந்துவரும்

எழுந்துவரும்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றாலும், இந்தியாவால் திரும்பவும் வீறு கொண்டு எழுந்து வர முடியும் என்று நம்புகிறேன். நியூசிலாந்தின் திறமையான பந்து வீச்சால்தான் அன்றைய போட்டியில் இந்தியா தோற்றது.

சகஜம்

சகஜம்

நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டி எதிலும் வென்றதில்லை என்பதும் இந்தியாவுக்கு மனரீதியாக நெருக்கடியை கொடுத்திருக்கும். ஏதாவது ஒருநாளில், ஒரு அணி சறுக்குவது சகஜமானது. எதுவுமே க்ளிக் ஆகாமல் அன்றைய தினம் சொதப்பல்கள் நிகழும். அதற்காக சோர்ந்துவிடக்கூடாது. அடுத்த போட்டி பற்றி இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

Story first published: Friday, March 18, 2016, 14:34 [IST]
Other articles published on Mar 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+