Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவால் அரையிறுதிக்கு செல்ல முடியுமா?.. கொஞ்சோண்டு ஒட்டியிருக்கும் வாய்ப்பு.. முழு விவரம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து என அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்த இந்திய அணி பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பையும் இழந்து விட்டது.

Recommended Video

How Can India Qualify For the Semi-Finals? Possible Scenarios | T20 World Cup | Oneindia Tamil

அணியின் தோல்விக்கு கேப்டன் விராட் கோலிதான் காரணம். இல்லை.. இல்லை.. மென்டர் தோனிதான் காரணம் அவர் அணிக்கு ஒன்னும் செய்யவில்லை என்று ரசிகர்கள் டுவிட்டரில் முட்டி மோதிக் கொள்கின்றனர்.

வாய்ப்பு இருக்கிறதா?

வாய்ப்பு இருக்கிறதா?

இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட் கோலியோ அல்லது தோனியோ அல்லது சக வீரர்களோ அல்லது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ யாராக வேண்டுமானால் இருக்கலாம். தோல்வி தோல்விதான் இனி அதனை திரும்ப பெற முடியாது. இப்போது நாம் பார்க்க வேண்டியது எல்லாம் இந்தியாவுக்கு இன்னும் அரையிறுதி செல்ல வாய்ப்பு இருக்கிறதா? என்பதுதான்.

மூவர் போட்டி

மூவர் போட்டி

இரண்டு படுதோல்வியை சந்தித்த இந்தியா அரையிறுதிக்கு செல்லும் என்று உறுதியாகவும் கூறி விட முடியாது. அதே வேளையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறி விட முடியாது. என்ன குழப்புகிறாய் என்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன். இந்திய அணியில் பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் அரை இறுதிக்குள் நுழைந்து விட்டது. எனவே மீதமுள்ள ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேதான் 2-வது அணியாக யார் செல்ல போகிறார்கள்? என்பதில் போட்டி.

ஆப்கானிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு

இதில் ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொண்டால் இரண்டில் வெற்றி பெற்று +3.097 என்ற வலுவான நெட் ரன் ரேட்டில் உள்ளது. இந்தியா, நியூசிலாந்து என இரண்டிலும் வெற்றி பெற்றால் அந்த அணி உள்ளே நுழைந்து விடும். அதே வேளையில் இந்தியாவிடம் வீழ்ந்து, நியூஸியிடம் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. நியுசிலாந்தை பொறுத்தவரை 2 புள்ளிகளுடன் +0.765 என்ற நல்ல ரன் ரேட்டை வைத்திருக்கிறது. ஆப்கானை தோற்கடித்தால், மற்ற இரு அணிகளையும் சுலபமாக தோற்கடித்து அந்த அணி உள்ளே செல்ல நிறைய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு கஷ்டம்தான்

இந்தியாவுக்கு கஷ்டம்தான்

இதில் இந்தியாவின் வாய்ப்புதான் மிக மிக குறைவாக இருக்கிறது. ஏனென்றால் 2 படுதோல்வியுடன் இந்தியாவின் ரன் ரேட் -1.609 என்று நபிபியாவை விட மோசமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான், நபிபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 3 அணிகளுடன் மோத உள்ள இந்தியா மிகப்பெரிய ரன் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்டாயத்தில் இருக்கிறது. அதவாது 80 ரன்களுக்கு மேலான ரன் வித்தியாசம், 9 அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க முடியுமா?

ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க முடியுமா?

இப்படி வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால்தான் இந்தியா உள்ளே போக வாய்ப்பு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட் மிக வலுவாக உள்ளது. இந்தியாவின் ரன் ரேட் மிக கேவலமாக உள்ளது. எனவே இதெல்லாம் நடந்து ரன் ரேட் அடிப்படையில் இந்தியா உள்ளே செல்ல சுமார் 10% வாய்ப்புகளே உள்ளது. இதெயெல்லாம் பிறகு பார்க்கலாம். முதலில் இந்தியா ஆப்கானிஸ்தானை வெல்ல வேண்டுமே.. ஏனெனில் இந்தியாவை ஆட்டம் காண வைத்த பாகிஸ்தானிடமே போராடிதான் தோல்வியை தழுவியது ஆப்கான். ரஷீத்கான் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானை தோற்கடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Monday, November 1, 2021, 19:46 [IST]
Other articles published on Nov 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+