சேப்பாக்கத்திற்கு வரும் "உலகக் கோப்பை".. சென்னைக்கு அடித்த செம லக்..கங்குலி எடுத்த சிறப்பான முடிவு!
சென்னை: 2021ல் இந்தியாவில் நடக்க உள்ள டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது.
2021ம் ஆண்டு கிரிக்கெட் உலகம் மிகவும் விறுவிறுப்பாக இருக்க போகிறது. இந்தியா - இங்கிலாந்து தொடர், இந்தியா நியூசிலாந்து தொடர், ஐபிஎல் தொடர் என்று அடுத்தடுத்து நிறைய கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடக்க உள்ளது.
இதில் இன்னொரு பக்கம் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் அடுத்த வருடம் நடக்க உள்ளது. இந்த வருடம் நடக்க வேண்டிய டி 20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ளது.

அடுத்த வருடம்
அடுத்த வருடம் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. இதற்காக பிசிசிஐ அமைப்பில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழு இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இன்னொரு குழு
இன்னொரு குழு இந்திய மைதானத்தில் எங்கெல்லாம் போட்டிகள் நடக்கும் என்பதை தீர்மானிக்கும். இதில் இந்திய அணி எந்த மைதானத்தில் எல்லாம் ஆடும் என்றும் ஆலோசனை செய்யப்படும். இந்த நிலையில் இந்தியாவில் எந்த மைதானத்தில் எல்லாம் இந்த டி 20உலகக் கோப்பை நடக்கும் என்று முதல் கட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது.

முதல் கட்ட விவரம்
அதன்படி அஹமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, மொஹல், தர்மசாலா, கொல்கத்தா, மும்பை, ஆகிய மைதானங்களில் இந்த கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. சென்னையில் இந்த தொடரின் 2-3 போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மைதானம் ஸ்பின் மைதானம் ஆகும்.

ஸ்பின்
இதனால் இந்திய அணி களமிறங்கும் 2 போட்டிகள் இங்கு நடக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஸ்பின் பவுலிங்கில் திணறும் வலுவான அணிகள் மோதும் போட்டிகளும் சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது. அடுத்த வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த தொடர் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications