Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை தேதிகள் வெளியானது.. எப்போது? எங்கு போட்டிகள்? ரசிகர்களுக்காக ஐசிசி பக்கா ப்ளான்!

மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2021ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தலாக இருப்பதால் போட்டிகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தேதிகள்

புதிய தேதிகள்

கொரோனா காரணமாக இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே புதிய இடத்தை தேர்ந்தெடுப்பது குறித்து பதிலளிக்க பிசிசிஐ-க்கு ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது ஐசிசி அமைப்பு. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை வரும் அக்டோபர் 14ம் தேதி தொடங்கவிருப்பதாகவும், அக்டோபர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கும் என கூறப்படுகிறது.

எத்தனை அணிகள்

எத்தனை அணிகள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 2018ம் ஆண்டு தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் வங்கதேசம், இலங்கை அணிகள் தரவரிசையில் 9 மற்றும் 10-ம் இடத்தில் இருந்ததால், தகுதிச்சுற்று மூலம் விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு வர உள்ளன. நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 நாடுகளும் தகுதிச்சுற்றில் மோதவுள்ளன.

தகுதிச்சுற்று போட்டிகள்

தகுதிச்சுற்று போட்டிகள்

இந்த தகுதிச்சுற்று போட்டிகள் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. மேல் குறிப்பிட்ட 8 அணிகளும் குரூப் 1 மற்றும் க்ரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. (இரு பிரிவுகளில் தலா 4 அணிகள் இடம்பெறவுள்ளன). இந்த ஆட்டங்களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றிலும் குரூப்1 மற்றும் குரூப் 2 என்ற பிரிக்கப்படவுள்ளன. தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்து ஓமனில் நடைபெறும் எனத்தெரிகிறது.

 சூப்பர் 12 சுற்று

சூப்பர் 12 சுற்று

சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் தகுதிச்சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 4 அணிகள் மற்றும் ஏற்கனவே தகுதிப்பெற்ற 8 அணிகள் என மொத்தம் 12 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. ( ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 6 அணிகள்) இந்த அணிகளுக்கு இடையே மொத்தம் 30 போட்டிகள் நடைபெற்று சாம்பியன்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களில் ( சார்ஜா, அபுதாபி, துபாய்) நடைபெறவுள்ளது. இந்த தகவல்கள் ஐசிசி வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் பிசிசிஐ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 26, 2021, 12:13 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+