கர்மா ஒரு பூமராங்.. அன்று தோனி.. இன்று கான்வே.. பாகிஸ்தானிடம் நியூசிலாந்து அணி தோற்றது இங்கு தான்!
சிட்னி: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு ஒரே ஒரு விஷயம் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 4 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 153 ரன்களை எட்டி வெற்றி கண்டது.

2019ம் ஆண்டு சம்பவம்
இந்நிலையில் நியூசிலாந்தின் இந்த தோல்வியையடுத்து இந்திய ரசிகர்கள் 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவுக்கூர்ந்து வருகின்றனர். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் தான் மோதியது. இதில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் இந்தியா 221 ரன்களில் ஆல் அவுட்டானது.

தோனியின் ரன் அவுட்
இதில் இந்தியா தான் வெல்லும் என கடைசி வரை நம்பிக்கை இருந்தது. ஆனால் தோனியின் ஒரே ஒரு ரன் அவுட் அனைத்தையும் மாற்றியது. கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என இருந்த போது தோனி 49 ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக நூலிழையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. தோனியும் ஓய்வு பெற்றார்.

இன்றும் அதே சம்பவம்
இதே சம்பவம் தான் இன்று நியூசிலாந்துக்கும் நடந்தது. ஓப்பனிங் வீரரான ஃபின் ஆலன் முதல் ஓவரிலேயே அவுட்டானதை அடுத்து, அனைவரின் நம்பிக்கையும் டெவோன் கான்வே மீதுதான் இருந்தது. அவரும் அதற்கேற்றார் போலவே பாகிஸ்தான் தந்த அழுத்தங்களை தவிடுபொடியாக்கி பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

துரதிஷ்டவசம்
6வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தை கான்வே அருகிலேயே அடித்துவிட்டு ரன் ஓட முயன்ற போது, வெறும் நூலிழையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின்னர் தான் நியூசிலாந்தின் ரன்ரேட் ஒட்டுமொத்தமாக சரிந்தது. ஒருவேளை கான்வேவின் அதிரடி மட்டும் தொடர்ந்திருந்தால் நியூசிலாந்தின் ஸ்கோர் 180+க்கு மேல் சென்றிருக்கலாம். இதனால் இந்த சம்பவத்தை வைத்து இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications