Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ஓவருக்கு 5 பந்துகள் தானா??.. டி20 உலகக்கோப்பையில் மோசமான அம்பயரிங்.. விட்டு விளாசும் ரசிகர்கள்!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவருக்கு 5 ரன்கள் தான் என அம்பயர்களே முடிவு செய்துவிட்டதால் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. குறைந்த ரன்ரேட்டுடன் தான் ஆஸ்திரேலியா வென்றதால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

சர்ச்சை சம்பவம்

சர்ச்சை சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியில் அம்பயர்கள் செய்த ஒரு தவறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் 5 பந்துகளை மட்டுமே வீசியுள்ளது. ஆட்டத்தின் 4வது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார். அதில் 4வது பந்தில் ரன் எடுக்க முயன்ற போது, ஓவர் த்ரோ ஆனதால் பரபரப்படைந்தது. இதே பதற்றத்துடன் 5வது பந்தை வீச, அது டாட் பாலாக மாறியது.

5 பந்துகள் மட்டுமே

5 பந்துகள் மட்டுமே

ஆனால் அந்த ஓவர் த்ரோ பதற்றத்தில் இருந்த நவீன் உல் ஹக், தனது ஓவர் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு 5வது பந்துடன் நடையை கட்டினார். அவர் தான் கவனிக்கவில்லை என்று பார்த்தால், களத்தில் இருந்த 2 அம்பயர்களும் பார்ப்பதற்கு தவறிவிட்டனர். களநடுவர்கள் தவறவிடுவதை பார்ப்பதற்கு தான் 3வது நடுவர் இருக்கிறார். ஆனால் அவரும் கவனிக்கவில்லை.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

யாருக்குமே அப்போது தெரியாததால், அந்த ஓவர் வெறும் 5 பந்துகளுடன் முடிவுக்கு வந்துவிட்டது. டி20 உலகக்கோப்பை போன்ற மிகப்பெரும் தொடரில், அம்பயர்கள் இப்படியா? கவனக்குறைவாக இருப்பது, என ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, November 4, 2022, 21:25 [IST]
Other articles published on Nov 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+