
விராட் கோலி ஃபார்ம்
இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்து காப்பாற்றியவர் விராட் கோலி தான். பாகிஸ்தான் போட்டியில் 32 ரன்களுக்குள் 4 விக்கெட்கள் சரிய, ஒற்றை ஆளாக போராடி வெற்றி தேடி தந்தார். நேற்று நடந்த நெதர்லாந்து போட்டியிலும் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார். தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்துள்ளார்.

குழம்பிய ரசிகர்கள்
இந்நிலையில் நல்ல ஃபார்மில் இருந்த விராட் கோலியை பார்த்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில் கிறிஸ்ட் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெதர்லாந்து போட்டிக்கு முன்னதாக விராட் கோலி, தென்னாப்பிரிக்க புகழ் டேல் ஸ்டெயினிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கில் கிறிஸ்ட் கத்திக்கொண்டே ஆக்ரோஷமாக விராட் கோலியிடம் கையை குலுக்கிவிட்டு சென்றார்.

என்ன காரணம்
பாகிஸ்தான் போட்டியின் போது ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார் லெந்த் பந்தை கோலி சிக்ஸருக்கு அடித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளவில்லை. இதில் கில் கிறிஸ்டும் ஒருவர். எனவே கோலியின் அந்த ஆட்டத்தால் வியந்த அவர், " எப்படிப்பா இதனை செய்தாய்" என்பது போல உற்சாகமாக கைக்குலுக்கிவிட்டு பாராட்டி சென்றுள்ளார்.

அதிக ரன் ஸ்கோரர்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி தான் 4வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 2 இன்னிங்ஸ்களில் 144 ரன்களை குவித்துள்ளார். இதே ஃபார்ம் தொடர்ந்து நீடித்தால், இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications